தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 30 வயதான சரவணன் என்பவர், அதே பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 12 வயதிலும் 10 வயதிலும் இரண்டு மகள்கள் உள்ளனர். குடிபழக்கம் காரணமாக சரவணனுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன் சரவணனின் மனைவி தன் பிள்ளைகளை கணவரிடம் விட்டு விட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சரவணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது பெண் குழந்தைகளின் அந்தரங்க உறுப்பு மற்றும் மார்பகங்களில் நக கீறல் காயங்கள் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குழந்தைகளிடம் கேட்டபோது அவர்கள், அப்பா எங்களிடம் இரவில் தவறாக நடக்க முயல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சரவணனின் மனைவி, முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.