வாட்ஸ் ஆப் செயலி பயனர்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்து வருகின்றது . குறிப்பாக அடுத்தடுத்து பல நவீன அப்டேட்களை நமக்கு அளிக்கின்றது. அந்த வகையில்தற்போது வெளியிட்டுள்ள அடுத்தக்கட்ட அப்டேட்டில் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம்.
ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்புவதற்கும், விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்கும், புகைப்படத்தை அனுப்புவதற்கும், வீடியோக்கள், ஆவணங்கள் பகிர்ந்து கொள்வதற்கும் வாட்ஸ்ஆப் பெரிதும் உதவியாக இருக்கின்றது. இதில் மக்களின் தேவைகளை புரிந்து கொண்ட வாட்ஸ் ஆப் அடுத்தடுத்த புதிய ஃபீச்சர்ஸ்களை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.
மக்களிடம் ஸ்டேட்டஸ் வைக்கும் ஃபீச்சர்ஸ் கொண்டுவரப்பட்டதன் மூலம் தங்களின் மனதில் தோன்றுவதை படம் பிடித்து அன்றைய தினத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அதே போல பயனர்கள் குறிப்பெடுக்கவோ, இல்லை வேறு ஏதாவது தகவல்களை சேமிக்கவோ வேறு ஒருவருக்கு தேவையில்லாமல் மெசேஜ் அனுப்புவார்கள் இது அவர்களுக்கு தொல்லையாக இருக்கும். ’’நண்பா இந்த மெசேஜை கண்டுகொள்ளாதே.. ’’ என கூறிவிட்டு மெசேஜ் அனுப்ப வேண்டி உள்ளது. இது போன்று குறிப்பெடுக்க பிறரை நம்ப வேண்டி உள்ளது.
இதைத் தடுக்கும் வகையில் நீங்களே உங்களுக்கு மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம். அல்லது உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் அந்த சாட்டர் பாக்சிஸ் சேமித்து வைத்துக்கொள்ளும் வகையில் இந்த ஃபீச்சர்ஸ் உள்ளது. இந்த அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட சோதனையாளர்களிடம் மட்டும் உள்ளது. விரைவில் சோதனைக்கு பின்னர் அனைவருக்கும் வரும் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
தொழில்நுட்பமும் அதன் அப்டேட்டன் வெர்ஷன்களும் அதிவேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், வீடியோ மெசேஜ், வாய்ஸ் கால், வீடியோ கால் , ஸ்டேட்டஸ் இப்படி அடுத்தடுத்து உருவாகியது. இதில் அனுப்பிய செய்தியை நீக்கும் வகையில் ஆப்ஷன்ஸ் கொண்டுவரப்பட்டது. குரல் ஸ்டேட்டஸ் வைக்குவகையில் கூட கொண்டுவரப்பட்டது. அடுத்தகட்டமாக இது அனைவருக்கும் தேவையான ஒன்று எதிர்பார்த்த ஒன்று, விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.