fbpx

”என்னடா இப்படி இறங்கிட்டீங்க”..!! அரசுப் பேருந்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்..!!

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் சின்சொலி நகரில் உள்ள அரசுப் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அரசுப் பேருந்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அரசுப் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த KA 38 F 971 பதிவு எண் கொண்ட அரசு டவுன் பஸ்ஸை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் பேருந்தில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் நகரை சுற்றியுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் ஆய்வு செய்த போது, திருடர்கள் சின்சொலி நகரில் இருந்து மிரியானா, தண்டூரா பகுதிகளை கடந்து தெலுங்கானா மாநிலத்திற்கு பேருந்தை கடத்தி சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தெலுங்கானா மாநிலத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார், பேருந்தை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

Chella

Next Post

பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் ஆபத்துகள்..!! வாகன ஓட்டிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Thu Feb 23 , 2023
பெட்ரோல் டேங்க்கில் அதிகபட்ச வரம்பிற்கு பெட்ரோல் நிரப்புவதால் ஏற்படும் ஆபத்துகளையும், அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம். அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களை பலர் முறையாகப் பராமரிக்காமல் இருந்து வருவதால், அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. சாலைகளில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றி எரிவது போன்ற சம்பவங்கள் அண்மையில் நடைபெற்றதை செய்திகள் மூலம் அறிய முடிந்தது. இதற்கு பல்வேறு காரணங்களை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களில் […]

You May Like