ஹரியானாவில் ‘பிட் புல்’ இனத்தை சேர்ந்த நாய் ஒன்று பெண் மற்றும் குழந்தைகளை கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் ஏற்கனவே 82 வயது மதிக்கத்தக்க பெண்ணை பிட்புல் நாய் கடித்து குதறியது. இந்நிலையில் 3 மாதங்களில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதே போல கான்பூரில் பசுமாட்டை கடித்து விடாப்படியாக பிடித்துக் கொண்ட வீடியோ பகீர் அளித்தது.
இதே போல ஹரியானாவின் சேவாரி மாவட்டத்தில் பாலியர் குர்த் என்ற கிராமத்தில் வளர்ப்புநாயான பிட்புல், ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்களை தாக்கியது. இதையடுத்து பெண்ணின் கால் , கை தலை என 50 இடங்களில் தையல் போடப்பட்டது.
அக்கம்பக்கத்தினர் பெண்ணில் அலறல் சட்டம் கேட்டு ஓடி வந்தனர். நாயிடம் இருந்து மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர். நாயின் உரிமையாளர் சூரஜ் தடியை எடுத்து அடித்தபோது கூட பிட்புல் தாக்குவதை நிறுத்தவில்லை.
பிட்புல் போன்ற நாய்கள் பாதுகாப்பு என்றாலும் கூட உரிமையாளர்களுக்கு கூட சில நேரங்களில் வினையாகிவிடுகின்றன. எனவே இந்த வகை நாய்களை வளர்க்கவும் விற்கவும் , இனப்பெருக்கம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அதே போல நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது.எனவே உடனடியாக இந்த வகை இன நாய்க்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.