fbpx

உலகக்கோப்பை 2011..!! தோனி அடித்து சிக்சர் விழுந்த இடத்தை நினைவிடமாக மாற்ற திட்டம்..!!

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி அடித்த சிக்சர் விழுந்த இடத்தை நினைவிடமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கவுரவிக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில், உலகக் கோப்பை 2011 தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ‘வின்னிங் ஷாட்’ சிக்சரை கவுரவிக்கும் வகையில், அந்த சிக்சர் விழுந்த இருக்கைகளை நினைவிடமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. தோனியின் சிக்சர் விழுந்த குறிப்பிட்ட இடத்தை ஒட்டியுள்ள 4 அல்லது 5 இருக்கைகளை அதன் நினைவிடமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் போது, அந்த நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, வரும் சனிக்கிழமை சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடும் ஐபிஎல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியின் போது, தோனியை கவுரவிக்கவும், பாராட்டி விழா நடத்தவும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில், ஒருவரின் சிக்சரை நினைவுகோரும் விதத்தில் நினைவிடம் அமைப்பது இதுவே முதல் முறை. ஏற்கனவே தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட்டில், அம்மாநில கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் பெயரில் ஒரு பெவிலியன் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் அபாயம்..!!

Tue Apr 4 , 2023
தனி மனித போக்குவரத்து, நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் என அனைத்திலும், எரிபொருளும், மின்சாரமும் இன்றியமையாததாக உள்ளது. உலகின் பெட்ரோல், டீசல் தேவையை பெருமளவுக்கு சவுதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகள் பூர்த்தி செய்கின்றன. மேலும், தங்கள் நாட்டின் வருவாயை பெருக்கவும், விநியோக அமைப்பில் கட்டுப்பாட்டை கொண்டு வரவும், கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலை நிர்ணயத்தில் ஒபெக் நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. சமீபத்திய ஒபெக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, […]

You May Like