பீகாரில் இலவச நாப்கின் கேட்ட மாணவிகளிடம் அடுத்து காண்டம் கேட்பீர்களா? என பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கேள்யெழுப்பியது சர்ச்சையாகியுள்ளது.
பீகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அவரிடம் மாணவிகள் சிலர், எங்களுக்கு இலவச நாப்கின்களை அரசு வழங்க வேண்டும். இதனால், நாங்கள் பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என கூறியுள்ளனர். அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது. அதனால், ரூ.20 முதல் ரூ.30 விலையுள்ள நாப்கின்களை எங்களுக்கு அவர்கள் வழங்க முடியாதா? என்றும் கேட்டனர்.
![இலவச நாப்கினை அடுத்து காண்டம் கேட்பீர்களா? மாணவிகளிடம் சர்ச்சையாக பேசிய பெண் ஐஏஎஸ் அதிகாரி..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/NEWW_1664383764330_1664437145302_1664437145302.jpg)
இதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர், இந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் முடிவு உண்டா? நாளைக்கு நீங்கள், அரசு ஜீன்ஸ் துணிகளை வழங்கலாம். அழகிய காலணிகளை வழங்கலாம் என கூறுவீர்கள். முடிவில், குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது, உங்களுக்கு இலவச காண்டம்கள் கூட வேண்டும் என கூறுவீர்கள் என பேசியுள்ளார். ஏன் அரசிடம் இருந்து பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது?. இந்த எண்ணம் தவறானது” என்று பேசியுள்ளார். இதற்கு மாணவிகள், தேர்தலின்போது வாக்குகளை பெற அரசு எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்து வருகின்றன என பதிலடி கூறினர். அதற்கு கவுர், நீங்கள் வாக்களிக்காதீர்கள். (பாகிஸ்தானை போல) என குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதன்பின்பு ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பெண்களின் உரிமை மற்றும் அதிகாரத்திற்காக கடுமையாக போராடிய நபர்களில் ஒருவர் என அறியப்படும் பெண் நான். சில சமூக விரோதிகள் என்னுடைய நன்மதிப்புகளை சீர்குலைக்கும் கீழ்த்தர முயற்சிகளில் இதுபோன்று ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் நிதிஷ்குமார், ”உடனடியாக ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் உதவுகிறோம். ஒவ்வொன்றையும் கண்காணித்து வருகிறேன். இந்த சம்பவத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.