fbpx

’யாரு சாமி நீங்க’ மொமண்ட்..!! ஆடு, கோழி, நாயுடன் ஒரு Ride..!! நெட்டிசன்களின் வாயை பிளக்க வைத்த வீடியோ..!!

விநோதமான, விசித்திரமான நிகழ்வுகளின் உறைவிடமாகவே இருக்கிறது சமூக வலைதளங்கள். அதுவும் சாலைகளில் நடக்கும் பல நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் பலவும் சோஷியல் மீடியாக்களில் பட்டையக் கிளப்ப தவறுவதில்லை.

அந்த வகையில், இந்தியாவின் சாலையில் ஒரு பைக்கில் வண்டி ஓட்டுபவரை தவிர 6 பேர் பயணித்ததோடு, அந்த பைக்கில் இரண்டு நாய்களும், ஒரு கோழியோடு சேர்த்து சில பல மூட்டைகளையும் பைக்கின் பக்கவாட்டில் மாட்டியும் சென்ற வீடியோதான் நெட்டிசன்களை வாயை பிளக்க வைத்திருக்கிறது. இது தொடர்பான வீடியோவின் கேப்ஷனில், “டிராஃபிக் போலீசிடம் சிக்கினால், அபராதம் கட்டுவதற்கு என வங்கியில் கடன் தான் வாங்க வேண்டியிருக்கும் போல” என இந்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 260.1k பார்வையாளர்கள் பார்த்திருக்கும் இந்த வீடியோவிற்கு எக்கச்சக்கமானோர் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

’யாரு சாமி நீங்க’ மொமண்ட்..!! ஆடு, கோழி, நாயுடன் ஒரு Ride..!! நெட்டிசன்களின் வாயை பிளக்க வைத்த வீடியோ..!!

அதில், “இதை பார்த்தால் ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்ற சொற்றொடர் குறித்து அந்த தம்பதி அறிந்திருக்க மாட்டார்கள் போலிருக்கிறது” என்று பதிவிடப்பட்டிருக்கிறது. மேலும், “ஒரு கொஞ்சம் ஊழியர்களை வைத்து எலான் மஸ்க் ட்விட்டரை நடத்துறாரே அது மாதிரியா?” என்று ட்வீட் போட்டிருக்கிறார்கள்.

Chella

Next Post

சலுகைகளை அள்ளிக்கொடுக்கும் அமேசான்..!! ஆனா, இனி உங்களுக்கு வேலை இல்ல..!! ராஜினாமா பண்ணுங்க..!

Thu Nov 24 , 2022
இந்திய ஊழியர்களை வெறுமனே பணிநீக்கம் செய்யாமல் பல்வேறு சலுகைகள் அடங்கிய VSP என்ற திட்டத்துடன் வெளியேற்றுகிறது அமேசான் நிறுவனம். ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கை தொடர்ந்து, அமேசான் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவில் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருகிறது. செலவினங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது என அமேசான் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அந்நிறுவனம் […]

You May Like