அம்பிகையை வழிபடுவதற்குரிய மிக முக்கியமான காலமாக நவராத்திரி திகழ்கிறது. இந்த நாட்களில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். முதல் 3 நாட்கள் துர்கையாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் தேவியரை வழிபடுவது வழக்கம். இதன் மூலம் அவர்களின் அருள் முழுமையாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.
அந்த வகையில், இந்தாண்டு நவராத்திரி செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 1ஆம் தேதி சரஸ்வதி பூஜையுடன் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 2ஆம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி கொலு வைக்கும் நேரம் :
நவராத்திரி வழிபாட்டை கொலு வைப்பது, கலசம் அமைப்பது, படம் வைப்பது அல்லது அகண்ட தீபம் ஏற்றி வைப்பது என 4 வகைகளில் மேற்கொள்ளலாம். கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுபவர்கள், கொலு பொம்மைகளை அடுக்கி வைப்பதற்கு ஒரு சில குறிப்பிட்ட நேரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலர் முந்தைய மகாளய அமாவாசை தினத்திலேயே கொலு வைக்க தொடங்குவார்கள். செப்.21-ஆம் தேதி காலை 6.00 மணி முதல் 11.50 மணி வரை கொலு பொம்மைகளை அடுக்கி வழிபாட்டை சிலர் தொடங்கியிருப்பார்கள். நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22ஆம் தேதி காலை 6.00 மணி முதல் 7.20 மணி வரையிலும் அல்லது காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரையிலும் கொலு பொம்மைகளை அடுக்கி வழிபாட்டைத் தொடங்கலாம். இந்த நேரங்களில் முடியாதவர்கள், நவராத்திரியின் முதல் நாளில் மாலை 6.00 மணிக்கு மேல் வழிபாட்டைத் தொடங்கலாம்.
Read More : இன்று முதல் விலை குறையும் அத்தியாவசிய பொருட்கள் என்னென்ன?. முழு விவரம் இதோ!



