அடிப்படை அறிவைக்கூட நயினார் இழந்துவிட்டார்.. த்ரிஷா குறித்த விமர்சனம்.. நாஞ்சில் சம்பத் பதிலடி..!

nanjil sambath

தமிழகத்தில் தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் விமர்சனம் செய்து வருகின்றனர்..


அந்த வகையில் நேற்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. அப்போது பேசிய அவர் “ விஜய் அனுபவமே இல்லாதவர்.. விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.. த்ரிஷா விட்டு விட்டு வெளியே வரவேண்டும்..  விஜய் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டார், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? அது தான் விஜய்க்கான பதில். விஜய் ஒரு ஆளே கிடையாது, நான் அவரைப்பற்றி பேசவே போவதில்லை.” என்று தெரிவித்தார்..

இதையடுத்து நயினாரின் இந்த கருத்துக்கு தவெகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார். அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா?

4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா? முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : ரூ.5,000 உரிமைத்தொகை..!! காட்டுத் தீயாய் பரவிய வதந்தி..!! வங்கி, ஏடிஎம்களில் அலைமோதிய கூட்டம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி விளக்கம்..!!

RUPA

Next Post

ஒருவர் எத்தனை முறை உண்மையான காதலில் விழுகிறார்..? ஆய்வில் வெளியான அதிர்ச்சியூட்டும் உண்மை..!

Sat Feb 14 , 2026
ஒரு நபர் தனது வாழ்நாளில் எத்தனை முறை காதலிக்கிறார்? இது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. காதல் என்பது ஒரு அழகான அனுபவம், ஆனால் அது திரைப்படங்கள் மற்றும் நாவல்களில் நாம் பார்ப்பது போல் மீண்டும் மீண்டும் நடக்கிறதா? அல்லது நம் வாழ்வில் அதற்கு ஒரு வரம்பு இருக்கிறதா? இன்றைய வேகமான வாழ்க்கையில், நாம் காதலைப் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், பிரபலமான கின்சி நிறுவனம் […]
love break up

You May Like