Flash : டெல்லியில் 2-வது குண்டுவெடிப்பு? ரேடிசன் ஹோட்டல் அருகே பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதால் பீதி..

blast delhi 1763008620

டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில், ரேடிசன் ஹோட்டல் அருகே இன்று மற்றொரு வெடிப்பு சம்பவம் நடந்ததாக போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து, சிறிது நேரம் பீதி நிலவியது. இன்று காலை 9:18 மணிக்கு ஒரு பெண்மணி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு மேற்கொண்ட அவர்அருகில் வெடிகுண்டு போன்ற சத்தம் கேட்டதாகக் கூறினார். இந்த புகாரை சரிபார்க்க பல போலீஸ் குழுக்களும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.


மஹிபால்பூரில் உள்ள ராடிசன் ஹோட்டல் அருகே “குண்டுவெடிப்பு போன்ற” சத்தம் காலை 9.19 மணிக்கு வந்ததாக தகவல் கிடைத்தது. உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இருப்பினும், முழுமையான சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான எந்த நடவடிக்கையோ அல்லது பொருளோ கிடைக்கவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

எனினும் இந்த சத்தத்திற்கான காரணம் பின்னர் அடையாளம் காணப்பட்டது, “தௌலா குவான் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தின் பின்புற டயர் வெடித்ததாகவும், அதிலிருந்து சத்தம் வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்..

எனினும் டெல்லி காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், மஹிபால்பூர் பகுதியில் இயல்புநிலை முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியது.

நவம்பர் 11 அன்று செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே பயங்கர கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.. இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.. இதையடுத்து டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.. இந்த சூழலில், டெல்லியின் மஹிபால்பூரில் இந்த தவறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, “பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கோட்டை மெட்ரோ நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும்” என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.. எனினும் மற்ற அனைத்து நிலையங்களும் வழக்கம் போல் செயல்படுகின்றன.

Read More : 4 நகரங்களில் தொடர் தாக்குதல் நடத்த ஸ்கெட்ச்.. தயாராக இருந்த 32 வாகனங்கள்; கார் வெடிப்பு விசாரணையில் பகீர் தகவல்கள்!

RUPA

Next Post

சீலிங் ஃபேன் வேகம் 5-ல் ஓடினால் மின் கட்டணம் அதிகரிக்குமா..? ரெகுலேட்டர் சொல்லும் ரகசியம் என்ன..? பலருக்கும் தெரியாத உண்மை..!!

Thu Nov 13 , 2025
பெரும்பாலான வீடுகளில் சீலிங் ஃபேன்கள் அதிகபட்ச வேகத்தில் (வேகம் 5) இயக்கப்படுவது வழக்கம். ஆனால், இவ்வாறு முழு வேகத்தில் இயக்குவது மின்சார கட்டணத்தை அதிகரிக்க செய்யுமா என்ற பொதுவான கேள்வி எழுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக வேகத்தில் இயங்கும்போது, குறைந்த வேகத்துடன் ஒப்பிடுகையில் ஃபேன் சற்று அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் இந்த வித்தியாசம் கடுமையாக இல்லாமல் மிதமானதுதான். மின் நுகர்வில் ரெகுலேட்டரின் பங்கு : ஃபேனின் வேகம் கட்டுப்படுத்தப்படும் […]
Fan EB Bill 2025

You May Like