யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…! மிஸ் பண்ணிடாதீங்க

UGC 2025

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்டிஏ அறிவித்துள்ளது.


பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் நடைபெற உள்ளது. அதன்படி நடப்பாண்டுக்கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. தேர்வு தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்பட உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து விண்ணப்பங்களில் நவம்பர் 10 முதல் 12-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். பாடத்திட்டம், தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறியலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/40759000 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு...! முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்...!

Fri Nov 7 , 2025
தொகுப்பூதிய பணியாளர்கள் இடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள். இது குறித்து அண்ணா கணக்காளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் மாநில இயக்ககம் முதல் மாவட்ட, வட்டார அளவிலான அலுவலகங்களில் கணக்காளர்கள், கணினி விவர பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், கணினி நிரல் தொகுப்பாளர்கள், கட்டிட பொறியாளர்கள் என 1,428 பேர் தொகுப்பூதிய பணியாளர்களாக […]
Mk Stalin Tn Govt 2025

You May Like