நீட் தேர்வு 2023.. விண்ணப்ப பதிவு எப்போது..? என்னென்ன ஆவணங்கள் தேவை..?

நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

நீட்

அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2023 தேர்வு, மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.. இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in-ல் வெளியிடப்படும்.

கடந்த ஆண்டை போலவே ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.. நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு செயல்முறை தொடங்கிய பிறகு, மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

என்னென்ன ஆவணங்கள் தேவை : நீட் தேர்வு எழுத விரும்புவோர், தங்களின் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நீட் தேர்வானது கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு: தகுதி, பாடத்திட்டம் : நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிர்-தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலத்தை பாடங்களாகக் கொண்ட 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/உயிர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

1newsnationuser1

Next Post

அமீர்-பாவனி இந்த தேதியில் தான் திருமணமா..? அவர்களே சொன்ன குட் நியூஸ்..!!

Thu Jan 26 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது திருமணம் வரை சென்றுள்ள அமீர்-பாவனி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் இருந்து அமீரின் காதலை ஏற்க தயக்கம் காட்டிய பாவனி, பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சி நிறைவடையும் தருணத்தில் காதலை ஏற்றுக்கொண்டு அமீருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். அதன்பின் சில ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த இருவரும், நடிகர் […]
அமீர்-பாவனி இந்த தேதியில் தான் திருமணமா..? அவர்களே சொன்ன குட் நியூஸ்..!!

You May Like