மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட், மே 4ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெற்றது. நாடு முழுவதும் 557 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களிலும் வெளிநாட்டில் 14 மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நீட் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல தமிழ்நாட்டிலும் ஆவடி உள்ளிட்ட தேர்வு மையங்களில் மின் தடை ஏற்பட்டதால், நீட் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரி மாணவர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. தொடர்ந்து ஜூன் 16ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அதுவரை மறு தேர்வு நடத்துமாறு உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தேசியத் தேர்வுகள் முகமை வட்டாரத்தில் கூறும்போது, திட்டமிட்டபடி ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி (ஜுன்) வெளியிட்டது. மாணவர்கள் இந்த விடைக்குறிப்பு குறித்த தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி, மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு (பைனல் ஆன்ஷர் கீ) தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று (ஜுன் 14) வெளியாவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ இந்த என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் NEET 2025 scorecard download என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். நீட் தேர்வு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும். அதில் மேலும் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சமர்ப்பிக்கவும். உடனே, தேர்வு முடிவு அடங்கிய பிடிஎஃப் கோப்பு திறக்கும். உங்கள் பெயர் மற்றும் மதிப்பெண்களைச் சரிபார்க்கவும். எதிர்கால குறிப்புக்காக கோப்பைச் சேமிக்கவும்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதில் ‘NEET UG 2025 Result’ என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இதன்பிறகு தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Readmore: நிலநடுக்கங்களை முன்கூட்டியே எச்சரிக்கும் ஸ்மார்ட் வாட்ச்!. புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்!.