ரஜினி, கமல் இருவருமே தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஜாம்பாவான்கள்.. இருவரும் தங்கள் ஆரம்பக் கட்ட திரை வாழ்க்கையில் இணைந்து படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் தனித்தனியாக நடிக்க முடிவெடுத்து, அதன்படி நடித்து வந்தனர்.. ரஜினி, கமல் இருவருமே தங்கள் தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர்..
இந்த நிலையில் சுமார் 47 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஜினி கமல் இணைந்துள்ளனர்.. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.. நெல்சனின் ஸ்டைலில் கலகலப்பான ஸ்டைலான புரொமோவை படக்குழு வெளியிட்டள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.. இந்த புரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது..
ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் 7-வது இயக்குனர் என்ற பெருமையை நெல்சன் திலீப்குமார் பெற்றுள்ளார்.. 1975 மற்றும் 1979 க்கு இடையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் 13 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.. மேலும் இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தை வரையறுத்தனர்.. பல தசாப்தங்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில இயக்குநர்களுக்கு மட்டுமே இரு ஜாம்பவான்களுடனும் பணிபுரியும் பாக்கியம் கிடைத்துள்ளது.
ரஜினி, கமல் இருவரும் முதன்முதலில் அவர்களின் வழிகாட்டியான கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் (1975) இல் இணைந்து பணியாற்றினர்.. இந்த படம் ரஜினிகாந்தின் முதல் படமாகும்.. ரஜினி கேட்டை திறந்து வரும் ஐகானிக் காட்சி இந்த படத்தில் இடம்பெற்றது.. இந்த படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 1975 மற்றும் 1979 க்கு இடையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 21 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
இவற்றில் 3, 2 மொழித் திட்டங்கள் இருந்தன:
தப்பு தாளங்கள் (தமிழ்-கன்னடம்)
அலாவுதீனும் அத்புத விளக்கும் (தமிழ்–மலையாளம்)
நினைத்தாலே இனிக்கும் (தமிழ்-தெலுங்கு)
கே. பாலச்சந்தர்
கே பாலச்சந்தர் இரு நட்சத்திரங்களுக்கும் வழிகாட்டியாக இருந்தவர், மூன்று முடிச்சு, அவர்கள் மற்றும் தில்லு முல்லு (கமலின் கேமியோ தோற்றம்) உட்பட 7 படங்களை பாரதிராஜா இயக்கினார்..
ஐவி சசி
ஐவி சசி இயக்கிய அலாவுதீனும் ஆல்புத்த விளக்கும் படம் தான் ரஜினி, கமல் இணைந்து நடித்த கடைசிப் படமாகும்..
பாரதிராஜா
பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே (1977) என்ற கல்ட் கிளாசிக் படத்தில் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடித்தனர்.. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. கமல்ஹாசன் அப்பாவி சப்பாணியாக நடித்தார், அதே நேரத்தில் ரஜினிகாந்தின் மிரட்டலான பரட்டை என்ற கேரக்டரில் நடித்தார்.. இந்த படம் ரஜினி, கமல், பாரதி ராஜா என மூவரின் வாழ்க்கையிலும் ஒரு மைல்கல்லாக உள்ளது.
எஸ். பி. முத்துராமன்
எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஆடு புலி ஆட்டம் படத்தில் ரஜினி, கமல் ஒன்றாக நடித்தனர். இந்த படம் குறிப்பாக ரஜினிகாந்தின் ஐகானின் வசனமான இது தான் ரஜினி ஸ்டைல் என்ற வசனம் இன்று வரை பிரபலமாக உள்ளது..
சி ருத்ரய்யா
சி ருத்ரய்யா இயக்கத்தில் வெளியான அவள் அப்படித்தான் என்ற கல்ட் கிளாசிக் படத்தில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்தனர்..
ஸ்ரீதர்
ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இளமை ஊஞ்சலாடுகிறது படத்திலும் ரஜினி, கமல் இணைந்து நடித்திருந்தனர்.. இந்த படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது..
நெல்சன் திலீப்குமார்
தற்போது KH x RK படத்தின் மூலம், நெல்சன் ரஜினி, கமல் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் 7-வது இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்..



