புதுக்கோட்டையில் ரூ.767 கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறப்புகளை எடுத்துரைத்த முதலமைச்சர், அந்த மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்..
புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள்
அறந்தாங்கி வட்டம் நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்..
கீரமங்கலப் பகுதியில் விவவாய விளை பொருட்களுக்கான குளிர்பதன கிடங்கு ரூ.1.60 கோடியில் அமைக்கப்படும்.
ஆவுடையார்கோவில் ஊராட்சி, வடகாடு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்..
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.
கந்தர்வகோட்டை ஊராட்சி பேருராட்சியாக தரம் உயர்த்தப்படும்..
பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
தொடர்ந்து பேசிய முதல்வர் புதுக்கோட்டையில் சுமார் 37,000 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.. சுமார் 3 லட்சம் சகோதரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.. சுமார் 14 கோடியே கட்டணமில்லா விடியல் பயணங்களை நீங்கள் மேற்கொண்டுள்ளீர்கள்.. சுமார் 14,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3894 கோடி கடனுதவி தரப்பட்டுள்ளது..
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் 584 உயிர்களை காப்பாற்றி உள்ளோம்.. 88,000 பெண்கள் மகப்பேறு நிதியுதவி பெற்றுள்ளனர்.. 65,000 மாணவர்களுக்கு சூடான சத்தான காலை உணவு வழங்கப்படுகிறது..” என்று தெரிவித்தார்..



