இன்றைய அவசர காலகட்டத்தில், எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க ஆயுள் காப்பீடு (Health Insurance) எடுப்பது அவசியமாகிவிட்டது. ஆனால், பாலிசி வைத்திருந்தும் மருத்துவமனையில் ஏற்படும் செலவுகளை சுயமாக ஏற்கும் நிலை பலருக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம், நாம் ஆயுள் காப்பீடு எடுக்கும்போது செய்யும் சில அத்தியாவசிய தவறுகளே. மருத்துவச் செலவு அதிகமாகாமல் இருக்க, காப்பீடு எடுக்கும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய முக்கியத் தவறுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பாலிசி விலக்குகளை அலட்சியப்படுத்துவது :
ஒரு காப்பீட்டை வாங்கிவிட்டால் அனைத்துச் செலவுகளையும் நிறுவனம் ஏற்கும் என பலரும் நம்புகின்றனர். ஆனால், ஒவ்வொரு பாலிசியிலும் சில குறிப்பிட்ட சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் அல்லது உடல்நலப் பிரச்சனைகளுக்கு விலக்குகள் இருக்கலாம். பாலிசி ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த விலக்குகள் என்னென்ன என்பதைப் பாலிசி வாங்கும்போதோ அல்லது புதுப்பிக்கும்போதோ முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம். இதைத் தெரிந்து கொள்ளத் தவறினால், மருத்துவமனையில் அநாவசியச் செலவுகளை ஏற்க நேரிடும்.
காத்திருப்பு காலத்தை அலட்சியப்படுத்துவது :
ஒரு பாலிசி வாங்குவதற்கு முன்பு, ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்னைகளுக்கு (Pre-existing diseases) காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலத்தை நிர்ணயம் செய்திருக்கும். இந்தக் காத்திருப்பு காலத்தில் உங்களுக்குச் சிகிச்சை தேவைப்பட்டால், அதற்கான செலவை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்காது. எனவே, பாலிசியைத் தொடங்குவதற்கு முன் இந்தக் காத்திருப்பு காலம் பற்றித் தெளிவு பெறுவது முக்கியம்.
நெட்வொர்க் மருத்துவமனைகளை சரிபார்க்காமல் இருப்பது :
உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியுடன் இணைக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், அதற்கான செலவை நீங்களே ஏற்க வேண்டும். காப்பீட்டு நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்காது. எனவே, காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனை பட்டியலை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து, அதற்கேற்ப மருத்துவமனையைத் தேர்வு செய்வது பண இழப்பைத் தடுக்கும்.
மருத்துவமனையில் அனுமதி பற்றி தகவல் தெரிவிக்க தவறுவது :
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அது குறித்து காப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் அவசர காலங்களில் கூட, அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன. இந்த நிபந்தனையை மீறினால், உங்களுடைய மருத்துவக் கிளைம் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
தேவையான ஆட்-ஆன்களை வாங்கத் தவறுவது :
விலை குறைவான பட்ஜெட் பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பவர்கள், தேவையான ஆட்-ஆன்களை சேர்க்கத் தவறிவிடுவார்கள். குறைந்த காப்பீட்டுத் தொகையுள்ள பாலிசியால் பெரிய மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட முடியாது. எனவே, தேவையான அனைத்துக் காப்பீடுகளையும் வழங்கும் பாலிசியுடன், தேவைக்கேற்ற ஆட்-ஆன்களையும் சேர்த்து வாங்குவதை உறுதி செய்து கொள்வது, பெரிய செலவுகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.
Read More : அக்காள் கணவரை நினைத்து ஏங்கிப் போன தங்கை..!! கொழுந்தியாளுடன் ஓட்டம் பிடித்த மாமா..!! கோவையில் ஷாக்



