முட்டை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர் உணவாகும். புரதங்கள், வைட்டமின்கள் எனப் பல சத்துக்களைக் கொண்டிருக்கும் முட்டை, நமது ஆரோக்கியத்திற்குப் பல வழிகளில் நன்மை பயக்கும். இருப்பினும், முட்டை சாப்பிட்ட பிறகு அல்லது முட்டையுடன் சேர்த்துச் சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். அவ்வாறு செய்யத் தவறினால், நன்மைக்கு மாறாக, செரிமானக் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்று உணவு மற்றும் உடல்நல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, முட்டை சாப்பிட்ட பின் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மீன்: முட்டை மற்றும் மீன் ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சாப்பிட்டாலோ அல்லது அடுத்தடுத்துச் சாப்பிட்டாலோ சிலருக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்த இரண்டு உணவுகளையும் சிறிது இடைவெளி விட்டுச் சாப்பிடுவது நல்லது.
சர்க்கரை: முட்டை சாப்பிட்ட உடனே சர்க்கரை அல்லது இனிப்புச் சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முட்டையில் உள்ள அமினோ அமிலங்களும், சர்க்கரையில் உள்ள கூறுகளும் இணையும்போது, நமது உடலால் உறிஞ்சிக்கொள்ள முடியாத சில மூலக்கூறுகள் உருவாகின்றன. இதனால் இரத்தம் உறைவது போன்ற கடுமையான சிக்கல்கள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
டீ குடிப்பது: முட்டையின் கவிச்ச வாடையை போக்க டீ குடிக்கும் பழக்கம் பலரிடமும் உள்ளது. ஆனால், இது மிகவும் ஆரோக்கியமற்றது. தேயிலையில் உள்ள டானிக் அமிலம் முட்டையின் புரதத்துடன் சேர்ந்து வினைபுரியும்போது, உடலுக்குப் பல செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, இது குடல் இயக்கங்களைப் பாதிப்பதுடன், உடலில் நச்சுக்களின் அளவையும் அதிகரிக்கச் செய்யும்.
சோயா பால்: பலருக்கும் முட்டை சாப்பிட்ட பிறகு சோயா பால் குடிக்கும் பழக்கம் உண்டு. இது ஆரோக்கியமற்ற பழக்கமாகும். முட்டையும் சோயா பாலும் ஒன்றாகச் சேரும்போது, நமது உடல் முட்டையில் உள்ள புரதத்தைச் சரியாக உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதனால் முட்டையின் முழுமையான பலன் உடலுக்குக் கிடைக்காமல் போகிறது.
பழங்கள்: முட்டை உண்ட பிறகு ஆப்பிள், பேரிக்காய், திராட்சை போன்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லதல்ல. இந்தக் கலவையானது செரிமானச் செயல்முறையை மெதுவாக்கும்.
வாழைப்பழம்: முட்டை சாப்பிட்ட உடனேயே வாழைப்பழம் சாப்பிடுவதும் நல்லதல்ல. ஏனெனில் இந்த இரண்டும் சேர்ந்து வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மெதுவாக்கிவிடும். மேலும், மலச்சிக்கல், வாயு மற்றும் குடல் சார்ந்த அசௌகரியங்களையும் ஏற்படுத்தும்.
பன்னீர்: சிலர் முட்டையுடன் பன்னீர் கலந்த உணவுகளை (Paneer-Egg Mix) செய்து சாப்பிடுவார்கள். ஆனால், இந்த இரண்டு புரதச் சத்து நிறைந்த உணவுகளின் கலவையும் செரிமான மண்டலத்தைச் சேதப்படுத்தும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
முட்டையின் முழுமையான ஊட்டச்சத்துப் பலன்களைப் பெறவும், செரிமானச் சிக்கல்களைத் தவிர்க்கவும், மேற்சொன்ன உணவுகளை முட்டை சாப்பிட்ட பிறகு தவிர்ப்பது நல்லது என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read More : FLASH | இண்டிகோ, ஏர் இந்தியா உள்பட 250 விமான சேவைகள் நிறுத்தம்..!! அதிர்ச்சியில் பயணிகள்..!!



