ராமதாஸ் உடன் கூட்டணி அமைக்கும் சசிகலா..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? இன்றே முக்கிய முடிவு..!

sasikala ramadoss

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 


இந்த நிலையில் தமிழக தேர்தல் களத்தில் புதிய கூட்டணி உருவாக உள்ளது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு தொடர்பாக தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சசிகலா சந்தித்துள்ளார்.. திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாஸை சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்தினார்..

ராமதாஸ் தரப்பு வட மாவட்டங்களில் 40 தொகுதியிலும் சசிகலா தரப்பு தென் மாவட்டங்களில் 30 தொகுதியிலும் போட்டியிட திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.. சசிகலாவும் ராமதாஸும் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் இன்றே தொகுதிகள் இறுதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழம் என்ற கட்சியில் சசிகலா இணைந்துள்ளார். தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக தெரிவித்த சசிகலா, வரும் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : டெல்லியில் அதிமுக தொகுதி பங்கீட்டு டீல் முடிந்தது..! எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட்..?

RUPA

Next Post

சாதாரண பெட்ரோலை விட பிரீமியம் பெட்ரோல் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது..? இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்..?

Fri Mar 20 , 2026
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தற்போது இந்தியாவின் எரிபொருள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாததால் நுகர்வோர் நிம்மதி அடைந்துள்ளனர், அதே சமயம் பிரீமியம் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. மார்ச் 20, 2026 முதல், எண்ணெய் நிறுவனங்கள் பிரீமியம் பெட்ரோலின் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தியுள்ளன. சாதாரண பெட்ரோலுக்கும் பிரீமியம் பெட்ரோலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம். அவற்றின் […]
Normal vs premium petrol 1 1

You May Like