பாமகவில் கடந்த சில நாட்களாக உள் கட்சி மோதல் நிலவி வரும் சூழலில் அன்புமணிக்கு எதிராக சகோதரி ஸ்ரீ காந்தி களமிறக்கப்பட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக நியமித்தார்.
இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார், இதனால் மேடையிலேயே வார்த்தை மோதல் வெடித்தது. ராமதாஸ், “நான் உருவாக்கிய கட்சி, எனது முடிவை ஏற்காதவர் வெளியேறலாம்” என்று கூற, அன்பு மணி பனையூரில் தனி அலுவலகம் திறந்து செயல்படுவதாக அறிவித்து நிர்வாகிகள் தன்னை சந்திக்க அங்கே வரும்படி அழைப்பு விடுத்தார்.
ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதுமாக பிரச்சனை முற்றி வருகிறது. சமீபத்தில் செயற்குழுவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கி இருந்தார். அதுமட்டுமில்லாத 21 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார். பாமக கொறடா பதவியில் இருந்த அருளை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மயிலம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சிவகுமார் பாமக புதிய கொறடாவாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் முதல் அரசியல் மேடை ஏறிய ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இவரது மகன் முகுந்தனுக்கு பதவி வழங்கியதை எதிர்த்துதான் அன்புமணி சண்டையை தொடங்கினார். செயற்குழுக் கூட்டத்தில் ஸ்ரீகாந்தி பங்கேற்று இருப்பது அன்புமணிக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஜெயலலிதா, தேமுதிகவில் பிரேமலதா வரிசையில் பாமகவின் தலைமைக்கு ஸ்ரீகாந்தி வரவுள்ளதாக பேச்சுகள் வெளியாகியுள்ளது.
Read more: ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய மல்யுத்த வீராங்கனைகள்.. ஒரு வருடம் சஸ்பெண்ட்..!!