இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சர்!… அடிடாஸ்(adidas) நிறுவனம் !

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ்(adidas) நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ்(adidas) நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஆகியுள்ளது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதன் மூலம், இந்திய அணி விளையாடும் போட்டிகளில் அணியின் ஜெர்சியில் மேல் புறத்தில் அடிடாஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும்.

அடிடாஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் தொகை என்னவென்று குறிப்பிடவில்லை. அடிடாஸ் அடுத்த மாதம் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிகளை ஸ்பான்சர் செய்யத் தொடங்கும். அடிடாஸ் முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஸ்பான்சர் செய்தது. முன்பு இந்திய அணிக்கு கிட் ஸ்பான்சராக இருந்த எம்பிஎல்-லிடம் (MPL) ரூ.370 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மேலும், இந்திய அணிக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC Final 2023) போட்டிகள் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

KOKILA

Next Post

சென்னையில் இன்றுமுதல் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்!... மெட்ரோவில் பயணிக்க டிக்கெட் அவசியம்!

Tue May 23 , 2023
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளை காண மெட்ரோவில் வரும் பயணிகள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஐபிஎல் டிக்கெட்டில் உள்ள கியூஆர் கோடை பயன்படுத்தி மெட்ரோவில் எந்த வித கட்டணமும் இல்லாமல் பயணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துடன் இணைந்து மெட்ரோ நிர்வாகம் […]
மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம்..! எப்போது தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு

You May Like