புதிய ஓய்வூதிய திட்டம்.. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வருக்கு நன்றி.. போராட்டம் ரத்து என அறிவிப்பு..!

stalin nn

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.. அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.. அதன்படி அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பெறும் மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.


மேலும் “ 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.. 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்வு தரப்படும்.. ஓய்வூதியதார இறந்தார் அவர் பெற்ற ஓய்வூதியத்த்ல் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். பணிகாலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வுபெற்றாலும் குறைந்தபட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்..

அரசு அலுவலர்கள் உயிரிழந்தால் 20 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.. ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்.. புதிய திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறுவோருக்கு கருணை ஊதியம் வழங்கப்படும்.. புதிய ஓய்வூதிய திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.13,000 கோடி செலவு ஏற்படும்..” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.. முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி நன்றியை பகிந்து கொண்டனர்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.. மேலும் ” நாங்கள் எதிர்பார்த்தப் படி ஓய்வூதியத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் போராடி வந்தோம்.. நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக பணி நிறைவு பெறக் கூடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 50% ஓய்வூதியத்தை அறிவித்துள்ளார். மேலும் இறந்த அரசு ஊழியர்களின் இறப்பு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் அறிவித்துள்ளார். முதலமைச்சர் அவர்கள் அகவிலைப்படி உடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நாங்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.. ஜாக்டோ ஜியோ அமைப்பு அதனை முழுமையாக வரவேற்கிறது.. 23 ஆண்டுகால வரும் 6-ம் தேதி நடைபெற இருந்த அரசு ஊழியர்கள், ஆசியர்களின் கால வரையற்ற போராட்டம் ரத்து செய்யப்படுகிறது..” என்று தெரிவித்தனர்..

RUPA

Next Post

சத்தீஸ்கர் : 2 என்கவுண்டர்களில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை..! பாதுகாப்பு படை அதிரடி..!

Sat Jan 3 , 2026
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான பிஜாப்பூரில் சனிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல்துறை (DRG) நடத்திய இரண்டு தனித்தனி என்கவுன்டர்களில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நடந்த முதல் என்கவுன்டர் இதுவாகும். கொல்லப்பட்ட 14 மாவோயிஸ்டுகளில், 12 பேர் தெற்கு சுக்மாவில் கொல்லப்பட்டனர், அதிகாலை 5 மணிக்கு என்கவுன்டர் தொடங்கிய பிஜாப்பூரில் 2 பேர் கொல்லப்பட்டனர். சுக்மாவில் கொல்லப்பட்டவர்களில் கோண்டா […]
naxal operation

You May Like