ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது..
ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்..
இதனிடையே சமீபத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.. இதில் அன்புமணியின் தலைவர் பதவியை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
இதை தொடர்ந்து ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்திக்கு ராமதாஸ் அருகே இருக்கைகள் போடப்பட்டது.. மேலும் இந்த பொதுக்குழுவில் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீ காந்தி என்றே அவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்..
இந்த சூழலில் சில நாட்களுக்கு தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், அன்புமணி, பாலு, திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகளை நீக்கிவிட்டு, புதிய நிர்வாக குழு பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமனம செய்தார்.. இந்த நிர்வாகக் குழுவில் ராமதாஸ், ஜி.கே மணி, முரளி சங்கர், முத்துக்குமரன் உள்ளிட்ட 21 நிர்வாகிகளை நியமனம் செய்தார்..
இந்த நிலையில் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி ராமதாஸ் தரப்பின் நிர்வாகிகள் குழுவில் தற்போது ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.. அன்புமணிக்கு மாற்றாக பாமகவில் ஸ்ரீகாந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ராமதாஸ் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது..
Read More : இவர்களிடம் இருந்து முதலில் விஜய்யை காப்பாற்ற வேண்டும்.. தாடி பாலாஜியின் புதிய பதிவால் சர்ச்சை!