சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றும் பலர், வாகனங்களுக்காகத் தங்கள் வீட்டிலேயே போதுமான இடவசதி ஒதுக்கத் தவறுவதால், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டுப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தமிழகத்தின் நகர்ப்புறங்களில் பெரும் சவாலாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
ஏற்கனவே புதிதாக வீடு கட்டுவோருக்கு வாகன நிறுத்துமிட வசதியை (Parking Facility) கட்டாயமாக்கியிருந்தாலும், தனி வீடுகளுக்கான விதிமுறைகளில் நிலவிய குழப்பங்களைத் தீர்க்கும் வகையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தற்போது புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகள் கட்டுவோர் கட்டாயமாக 2 கார்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை ஒதுக்க வேண்டும். அதேபோல், 3,300 சதுர அடிக்கு மேற்பட்ட வீடு கட்டினால், 4 கார்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த விதிமுறைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்குப் போலவே, தனி வீடுகளுக்கும் இனி பொருந்தும். மேலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதும் அவசியம் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : உங்கள் வாழ்நாளில் இனி கல்லீரல் பிரச்சனையே வராது..!! இந்த காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கோங்க..!!



