4 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பிக்கள் நியமனம்..! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

Untitled design 5 6 jpg 1

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது.


ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று தான் செயல்பட முடியும்.. தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த காபந்து அரசாக செயல்படும்.

இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பிக்களை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. கரூர் எஸ்.பியாக டி.என். ஹரிகிரண் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஈரோடு எஸ்.பியாக டி.வி கிரண் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் எஸ்.பியாக சுஜித் குமார் நியனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் எஸ்.பியாக என்.ஸ்ரீநாதா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

RUPA

Next Post

குட்நியூஸ்..! இனி கேஸ் தட்டுப்பாடு இருக்காது..! இந்தியா வந்தடைந்தது LPG கப்பல்.. நாளை மற்றொரு கப்பல் வருகிறது..!

Mon Mar 16 , 2026
நாட்டின் எரிவாயு நுகர்வோருக்கு ஒரு நற்செய்தியாகும். ஈரான்-இஸ்ரேல் போரின் காரணமாக இந்தியாவில் ஏற்பட்ட எரிவாயு நெருக்கடி முடிவுக்கு வரவிருக்கிறது. ஆம், இந்தியாவில் ஏற்பட்ட எல்.பி.ஜி (LPG) பற்றாக்குறையைச் சமாளிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்துள்ளன. போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித்தவித்த ‘சிவாலிக்’ (Shivalik) எனும் எண்ணெய் கப்பல், தற்போது பாதுகாப்பாக இந்தியாவை வந்தடைந்துள்ளது. குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை அந்தக் கப்பல் தற்போது சென்றடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், […]
shivalik gas tanker 1

You May Like