தமிழ்நாட்டில் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்தான் அதிக புயல்கள் உருவாகும். ஆனால், நடப்பு ஆண்டு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே ‘மோந்தா’ புயல் உருவானது. இந்த சூழலில், இந்தியப் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாறுபாடுகள் காரணமாக, எதிர்மறை நிகழ்வுகள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த எதிர்மறை நிகழ்வுகளின் தாக்கத்தால், கடந்த 2019 ஆம் ஆண்டைப் போலவே, பல தீவிரமான மற்றும் அதி தீவிரப் புயல்கள் உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழகக் கடற்கரை மற்றும் உள்மாவட்டங்கள் பெரும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. வரவிருக்கும் நாட்களில் தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
புயல் உருவாவதற்கான காரணம் :
பொதுவாக, கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை உயரும்போது, நீராவி அதிகமாகி, அது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறுகிறது. ஆனால், இந்த எதிர்மறை நிகழ்வு என்பது, குறிப்பிட்ட பகுதியில் கடல் நீர் எதிர்பாராத விதமாக வெப்பமடைவதையும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பநிலை மாறுபடுவதையும் குறிக்கிறது. இது வழக்கத்திற்கு மாறான மற்றும் தீவிரமான வானிலை அமைப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது.
Read More : கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து உல்லாசம்..!! நேரில் பார்த்த பாட்டி கொடூர கொலை..!! உயிர் தப்பிய கணவன்..!!



