உலகம் முழுவதும் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்க தயாராக இருக்கும் வேளையில், இந்த ஆண்டும் வழக்கம்போல் நியூசிலாந்து முக்கியமான முதல் நாடுகளில் ஒன்றாக புத்தாண்டை வரவேற்றது. ஆக்லாந்து நகரின் அடையாளமாக விளங்கும் ஸ்கை டவர் மீது வானத்தை ஒளிரச் செய்த பிரம்மாண்ட பட்டாசு காட்சியுடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது.
ஆக்லாந்து ஸ்கை டவரில் பிரம்மாண்ட கொண்டாட்டம்
ஆக்லாந்து நகரத்தின் மையமாக இருக்கும் 240 மீட்டர் (787 அடி) உயரமுள்ள ஸ்கை டவர் மீது, 5 நிமிடங்களில் 3,500 பட்டாசுகள் பல தளங்களில் இருந்து பறக்கவிடப்பட்டன. நகர மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் இந்த காட்சியை காண கூடியிருந்தனர்.
வடக்கு தீவில் பல பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு வெளியானதால், சில சிறிய சமூக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
உலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்ற இடம்
பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி நாட்டின் கிரிட்டிமாட்டி தீவு (Kiritimati / Christmas Island) தான் உலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்கும் இடம். இந்திய நேரப்படி மதியம் 3.30 மணியளவில் அங்கு புத்தாண்டு பிறந்தது..
இந்திய நேரப்படி (IST) உலகின் பல நாடுகளில் புத்தாண்டு வரவேற்பு நேரங்கள்
நாடு / பகுதி புத்தாண்டு வரவேற்பு நேரம்
கிரிட்டிமாட்டி (Kiritimati) மாலை 3:30 – டிசம்பர் 31
நியூசிலாந்து மாலை 4:30 – டிசம்பர் 31
ஆஸ்திரேலியா (கிழக்கு கரை) மாலை 6:30 – டிசம்பர் 31
ஜப்பான், தென் கொரியா, வட கொரியா மாலை 8:30 – டிசம்பர் 31
சீனா, ஹாங்காங், தைவான் மாலை 9:30 – டிசம்பர் 31
தாய்லாந்து இரவு 10:30 – டிசம்பர் 31
இந்தியா & இலங்கை நள்ளிரவு 12:00 – ஜனவரி 1
ரஷ்யா (மாஸ்கோ) அதிகாலை 2:30 – ஜனவரி 1
உக்ரைன் அதிகாலை 3:30 – ஜனவரி 1
ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து அதிகாலை 4:30 – ஜனவரி 1
ஐக்கிய இராச்சியம், போர்ச்சுகல், கானா அதிகாலை 5:30 – ஜனவரி 1
பிரேசில், அர்ஜென்டினா காலை 8:30 – ஜனவரி 1
அமெரிக்கா (கிழக்கு கரை) காலை 10:30 – ஜனவரி 1
கடைசியாக புத்தாண்டை கொண்டாடும் இடங்கள்
UTC -12 நேர மண்டலத்தில் உள்ள அமெரிக்கன் சமோவா, பேக்கர் தீவு மற்றும் ஹவ்லண்ட் தீவுகள் உலகில் கடைசியாக புத்தாண்டை வரவேற்கும் பகுதிகள். இங்கு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு துவங்கிய பிறகு கிட்டத்தட்ட ஒரு முழு நாளுக்குப் பிறகே நள்ளிரவு வரும். பூமியின் சுழற்சி மற்றும் நேர மண்டலங்களின் காரணமாக, புத்தாண்டு உலகம் முழுவதும் சுமார் 26 மணி நேரத்திற்கு மேல் கொண்டாடப்படுகிறது.
Read More : பிறந்தது 2026..! உலகில் முதல் நாடாக புத்தாண்டை வரவேற்ற தீவு நாடு..! எது தெரியுமா?



