நாட்டின் பல முக்கிய விமான நிலையங்களுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. மாலை 3.40 மணி முதல் 3.45 மணி வரை டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த மின்னஞ்சல் செய்தியின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழு (BTAC) உடனடியாக செயல்படுத்தப்பட்டது. விரிவான சோதனைக்குப் பிறகு, அதிகாரிகள் அந்த மிரட்டல் புரளி என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ டெல்லி விமான நிலையம் – டெர்மினல் 3-ல் குண்டு வெடிக்கும் வாய்ப்பு குறித்து மாலை 4 மணியளவில் தீயணைப்பு படைக்கு அழைப்பு வந்தது. ஆனால் விசாரணைக்குப் பிறகு, அந்த அழைப்பும் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டது.” என்று தெரிவித்தனர்..
இண்டிகோவின் குறைதீர் தளத்தின் மூலம் வந்த அந்த மின்னஞ்சலில் டெல்லி, சென்னை, கோவா உள்ளிட்ட பல விமான நிலையங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எச்சரிக்கை வந்ததையடுத்து, அந்த இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் ஏற்பட்ட 12 உயிரிழப்புகளுக்கு காரணமான சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகே நிகழ்ந்தது. இதையடுத்து, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ நெட்வொர்க்குகள் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து மையங்களில் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Read More : டெல்லி வெடிப்பு: பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மற்றொரு சிவப்பு கார் கண்டுபிடிப்பு..!



