அமேசான் தனது மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 14,000 ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளது.. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 90 நாள் சம்பளத்துடன் பிரிவு தொகுப்பு வழங்கப்படுகிறது.
AI-ன் தாக்கத்தால் பல முன்னணி நிறுவனங்கள் பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் சமீபத்தில் 30,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.. இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.. மேலும் தனது மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நிறுவனம் முழுவதும் சுமார் 14,000 பணியிடங்களை நீக்க முடிவு செய்துள்ளது.. புதிய பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட நிறுவன ஊழியர்களுக்கு இதுதொடர்பான அறிவிப்புகளை அனுப்பத் தொடங்கியுள்ளது.
பணி நீக்கம் தொடர்பான மின்னஞ்சல்கள் கடந்த செவ்வாய் கிழமை காலையே அனுப்பப்பட்டன. சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே இந்த அறிவிப்புகளை பெற்றனர். அந்த செய்திகளில் தங்கள் தனிப்பட்ட அல்லது பணியிட மின்னஞ்சலைச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொண்டிருந்ததுடன், “உங்கள் பணியிடத்தைப் பற்றிய மின்னஞ்சல் கிடைக்கவில்லை என்றால்” ஒரு ஹெல்ப் டெஸ்க் எண்ணிற்கு அழைக்குமாறு கூறப்பட்டிருந்தது.
அமேசானின் மனிதவளத் தலைவர் பெத் கலெட்டி (Beth Galetti) நிறுவனம் உள்புற Slack தளத்தில் பகிர்ந்த செய்தியில், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அடுத்த 90 நாட்களுக்கு முழு சம்பளத்துடன் நன்மைகளையும் பெறுவார்கள்; அதன் பின்னர் பிரிவு தொகுப்பு (severance package) வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த மின்னஞ்சல் அமேசானின் அனைத்து பிரிவுகளுக்கும் பொதுவானதா என்பது தெளிவாகவில்லை.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான தனது மின்னஞ்சலில் “உங்களுடன் பகிர சில முக்கியமான ஆனால் கடினமான செய்தி உள்ளது. எங்கள் நிறுவன அமைப்பு, முன்னுரிமைகள் மற்றும் எதிர்கால நோக்குகளை முழுமையாக பரிசீலித்த பிறகு, அமேசானில் சில பணியிடங்களை நீக்கும் கடினமான வணிகத் தீர்மானத்தை எடுத்துள்ளோம். துரதிர்ஷ்டவசமாக, உங்கள் பணியிடம் நீக்கப்படுகிறது, மேலும் ஒரு non-working காலப்பகுதியின் பின்னர் உங்கள் வேலை முடிவடையும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..
மேலும் “இந்த முடிவுகள் எளிதாக எடுக்கப்படவில்லை. ஆனால் இந்த மாற்றத்தின்போது உங்களுக்கு முழு ஆதரவையும் வழங்க உறுதிபூண்டுள்ளோம். அதில் non-working காலத்தில் சம்பளமும் நன்மைகளும், பிரிவு தொகுப்பும், நாட்டின் அடிப்படையில் மாறும் மாற்ற நன்மைகளும், திறன் பயிற்சிகளும், வெளிப்புற வேலைவாய்ப்பு உதவிகளும் அடங்கும்.
ஊழியர்களின் அணுகல் அடையாள அட்டைகள் (badge access) ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன. எனவே அலுவலகத்தில் இருந்தவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் வழியே வெளியேற்றுவார்கள். மாற்றம் தொடர்பான அனைத்து செயல்முறைகளும் Amazon’s A to Z portal மூலம் நடைபெறும்; பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 90 நாள் காலப்பகுதியில் தங்கள் மின்னஞ்சல் மற்றும் உள்துறை தொடர்பு சேனல்களைப் பயன்படுத்த முடியும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த பணிநீக்கத்தில் பெரும்பாலான அமெரிக்க ஊழியர்கள் Amazon இன் retail management பிரிவில் பணிபுரிந்தவர்கள் என கூறப்படுகிறது. தனித்த பதிவில் (blog post) பெத் “இந்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இணையத்திற்குப் பிறகு நாங்கள் கண்ட மிகப் பெரிய மாற்றத் தொழில்நுட்பம். இது நிறுவனங்களுக்கு முந்தையதை விட வேகமாக புதுமைகளை மேற்கொள்ள வழி வகுக்கிறது. உலகம் வேகமாக மாறுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்..



