அடுத்த ஆண்டு கமலாலயம் இல்ல.. சென்னை கோட்டை தான் நம்ம டார்கெட்..!! – நயினார் நாகேந்திரன் பேட்டி..

nayinar 2

நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கமலாலயத்தில் நடந்த விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் குஷ்பு, தமிழிசை சவுந்தராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.


அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அடுத்த ஆண்டு சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவோம் என தெரிவித்தார். அவர் பேசுகையில் உலகின் மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. நாம் அனைவரும் தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கும் நாம் உறுதி ஏற்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசை அச்சுறுத்தி வருகிறார்கள்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது நாம் சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவோம். இது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Read more: சென்னையில் பயங்கரம்..!! உணவக மாஸ்டரின் கழுத்தை அறுத்த 3 சிறுவர்கள்..!! காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்..!!

English Summary

Next year we will hoist the flag at Chennai Fort..!! – Nainar Nagendran interview..

Next Post

இந்த 5 கிச்சன் பொருட்கள் நீங்க நினைப்பதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.. இதயநோய் நிபுணர் எச்சரிக்கை..!

Fri Aug 15 , 2025
A renowned cardiologist has warned about 5 everyday kitchen items that could be very harmful.
Harmful Kitchen items

You May Like