மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்:
பாதுகாப்பு காவலர் 30
ஏர்போர்ட் இயக்குநர் 1
வயது வரம்பு: பாதுகாப்பு காவலர் பதவிக்கு பொதுப்பிரிவினர் 43 வயது வரையும், பொதுப்பிரிவு பொருளாதாரத்தின் பின்தங்கியவர்கள் – 43 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 46 வயது வரையும், எஸ்சி பிரிவினர் 48 வயது வரையும், எஸ்டி பிரிவினர் 43 வயது வரையும் இருக்கலாம். ஏர்போர்ட் இயக்குநர் பதவிக்கு அதிகபடியாக 62 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி:
பாதுகாப்பு காவலர்:
- குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், இந்திய ராணுவத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப்படையில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
- மாவட்ட சைனிக் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- தமிழில் எழுதப் படிக்க மற்றும் பேசத் தெரிருக்க வேண்டும்.
- ராணுவத்தின் இசைக்குழு கருவிகள் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஏர்போர்ட் இயக்குநர்:
- கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களை ஒரு பாடமாக கொண்டு முழு நேரம் அல்லது பகுதி நேர பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- விமானப் போக்குவரத்து துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
- அதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஏர்போர்ட் ஆப்ரேஷன், டிராப்பிக் ஆகியவற்றில் பணியாற்றி இருக்க வேண்டும்.
- மேலும், பாதுகாப்புப் பிரிவில் E6 அல்லது மேற்பட்ட தகுதியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
* பாதுகாப்பு காலவர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
* ஏர்போர்ட் இயக்குநர் பதவிக்கு ரூ.90,000 முதல் ரூ.2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நெய்வேலி NLC இந்தியா நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு காவலர் (Security Guard) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு விவரம்:
மொத்த மதிப்பெண்கள்: 100
கேள்விகள்: 100
ஒரு கேள்விக்கு: 1 மதிப்பெண்
நெகட்டிவ் மார்க்: இல்லை
தேர்வு நேரம்: 120 நிமிடங்கள்
மொழி: ஆங்கிலம் மட்டும்
பாடப்பிரிவுகள்:
- பொது விழிப்புணர்வு (General Awareness)
- நுண்ணறிவு (Intelligence)
- லாஜிக்கல் ரிசனிங் (Logical Reasoning)
எழுத்துத் தேர்வில் தகுதி பெறும் நபர்கள் உடற்தகுதித் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
உடற்தகுதித் தேர்வு:
மொத்த மதிப்பெண்கள்: 30
ராணுவ சேவை மதிப்பெண்கள்:
ராணுவ சேவையுடையவர்களுக்கு: 20 மதிப்பெண்கள்
இறுதி மதிப்பெண் கணக்கீடு:
எழுத்துத் தேர்வு – 70%
சேவை மதிப்பெண்கள் – 15%
உடற்தகுதித் தேர்வு – 15%
இந்த மூன்று அடிப்படைகளின் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும். ஏர்போர்ட் இயக்குநர் பதவிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 20 மதிப்பெண்களுக்கு நேர்காணல் நடைபெறும். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி? மத்திய அரசு நிறுவனப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் https://www.nlcindia.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்: 20.01.2026 மாலை 5 மணி வரை.



