கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு புகாரின் பேரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. மேலும் இந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது.
அஜித் கொலை வழக்கில் புதிய திருப்பமாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.. அதன்படி, காரில் இருந்து நகை திருடியதாக நிகிதா கொடுத்தது பொய் புகார் என்ற தகவல் வெளியானது.. சிபிஐ விசாரணையில் நிகிதா முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததும் கூறப்பட்டது. கோயிலில் இருந்து கார் எங்குமே செல்லாத நிலையில் அஜித் மீது நிகிதா கொடுத்தது பொய் புகாராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது..
இந்த நிலையில் நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது.. அப்போது, இந்த வழக்கில் நகை திருட்டு என நிகிதா அளித்தது பொய் புகார் என சிபிஐ அளித்த தகவலை தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அறிவுறுத்தினார்..
இந்த சூழலில் மதுரையில் மடப்புரம் அஜித்குமாரின் குடும்பத்தினர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஜிதிகுமாரின் தாய் “ நிகிதாவை கைது செய்ய வேண்டும்.. அஜித்குமார் மரணம் லாக் அப் டெத் என நீதிமன்றத்தில் சிபிஐ கூறியது.. என் மகனை அடிக்க யார் உத்தரவிட்டது? போலீஸ் சோதனையில் எங்கள் வீட்டில் நகை எதுவும் கிடைக்கவில்லை.. நிகிதா பொய் புகார் அளித்தும் ஏன் தீவிர நடவடிக்கை எடுத்தனர்..
உணவு கூட கொடுக்காமல் என் மகனை அடித்து கொலை செய்துள்ளனர். என் மகன் தீவிரவாதியா? மிளகாய் பொடி கொடுத்து கடுமையாக தாக்கி உள்ளனர், காவல்துறையினர் மனித பிறவிகளா? என் மகன் அஜித்குமார் குற்றவாலி இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.. ஒன்றுமே இல்லாத புகாரில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்து இருந்தார்.. அஜித்குமார் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்.. சிபிஐ விசாரணையில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது..” என்று தெரிவித்தார்..
Read More : தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட வெடிப் பொருட்கள்.. 100-க்கும் மேற்பட்ட பெட்டிகள் பறிமுதல்..!



