சவாலில் ஜெயித்த நிதிஷ் குமார்..!! அரசியலில் இருந்து விலகுகிறாரா பிரசாந்த் கிஷோர்..? பீகாரில் அனல் பறக்கும் வாக்கு எண்ணிக்கை..!!

Prasanth Kishore 2025

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று 46 மையங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக 67.13% என்ற அதிகபட்ச வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகள் மற்றும் பிற வாக்குகளின் அடிப்படையில், ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி.) தலைமையிலான ‘இந்தியா கூட்டணி’ கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.


இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி உறுதியாகி வரும் நிலையில், ‘இந்தியா கூட்டணியின்’ முதலமைச்சர் வேட்பாளரான ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் சொந்த தொகுதியிலேயே பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவர் போட்டியிட்ட ரகோபூர் தொகுதியில், பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் குமார் 12,230 வாக்குகளுடன் முன்னிலை பெற்று வருகிறார். தேஜஸ்வி யாதவ் தற்போது 10,957 வாக்குகள் பெற்றுள்ளார்.

மறுபுறம், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி (ஜே.எஸ்.பி.), மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டும், ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெற முடியாமல் கடும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் நிதிஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ.) தற்போது 83 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகித்து வருகிறது. இந்தச் சூழலில், இது குறித்துப் பெரும் கேள்வி ஒன்று எழுந்துள்ளது. முன்னதாக, பிரசாந்த் கிஷோர் தனது பிரசாரத்தின்போது, நிதிஷ் குமாரின் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், தான் அரசியலில் இருந்து விலகுவதாக சவால் விடுத்திருந்தார்.

தற்போது ஐக்கிய ஜனதா தளம் 83 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், அவர் தனது சவாலின்படி அரசியல் பயணத்தில் இருந்து விலகுவாரா அல்லது கட்சியை மீண்டும் கலைத்துவிட்டுத் தேர்தல் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்ளும் தனது பழைய பணிக்குத் திரும்புவாரா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.

Read More : பீகார் தேர்தல்..!! பிரசாந்த் கிஷோருக்கே இந்த நிலைமையா..? விஜய்க்கு அடித்த எச்சரிக்கை மணி..!!

CHELLA

Next Post

பீகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவு.. தட்டி தூக்கிய பாஜக!

Fri Nov 14 , 2025
சமீபத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆரம்பத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நெருக்கமான போட்டியாக இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி முன்னிலை பெற தொடங்கியது.. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.. பீகார் தேர்தலில் முக்கியப் போட்டி […]
tejaswi 1

You May Like