யாரும் வெளியே போகாதீங்க…! 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!

பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிலவரப்படி நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு மற்றும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.


இதனால் பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் சூறாவளி காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது வருகிறது. நேச்சருக்கு நடவடிக்கையாக புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இன்று, தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Vignesh

Next Post

நோட்...!தமிழகத்தில் 2023- ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை...! மொத்தம் 24 நாட்கள்…! முழு விவரம் இதோ...

Mon Dec 26 , 2022
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்னும் 5 நாட்களில் 2023-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2023-ம் ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகள், கழகங்களுக்கும் […]
tn goverment

You May Like