யாருடனும் கூட்டணி இல்லை.. அது எல்லாமே பொய்.. தவெகவின் என்.ஆனந்த் பரபரப்பு அறிக்கை..!

tvk vijay anand

தமிழக வெற்றிக் கழகத்தின் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.


இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று வார இதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற வதந்திகளை பரப்பும் ஊடகத்தின் பொய்ச் செய்திகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களைக் கழகத் தலைவர் அவர்கள் விரைவில் அறிவிப்பார். தேர்தல் நிலைப்பாடு குறித்தும் கழகத் தலைவர் அவர்களின் முடிவே இறுதியானது.

எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

திடீரென முடங்கிய ChatGPT ? AI Chatbot தொடர்பான சிக்கல்களால் உலகம் முழுவதும் பயனர்கள் அவதி!

Wed Sep 3 , 2025
உலகளவில் ChatGPT AI Chatbot செயலி முடங்கியதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.. இந்தியாவில் 515க்கும் மேற்பட்ட நபர்கள் டவுன்டெக்டரில் உள்ள சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர், இது உலகளவில் பல பயனர்களைப் பாதித்து வருவதாகக் கூறுகிறது. கடந்த 30 நிமிடங்களில், நூற்றுக்கணக்கான பயனர்கள் AI சாட்போட்டில் உள்ள சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர் என்று ஆன்லைன் சேவை நிலையைக் கண்காணிக்கும் டவுன்டெக்டர் என்ற வலைத்தளம் தெரிவித்துள்ளது.. சில பயனர்கள் உண்மையில் தங்கள் பணி பாதிக்கப்படுவதைப் பற்றி […]
Chatgpt

You May Like