நாளை அறிவிப்பு வெளியாகாது..! தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம்..? என்ன காரணம்..?

cec ec election

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 2 மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதன்படி மேற்கு வங்கம் (மே 7 ), தமிழ்நாடு (மே 10), அசாம், (மே 20), கேரளா (மே 23), புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது..


தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. அந்த வகையில் கடந்த மாதம் இறுதியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தினார்.. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார்..

அதன்படி வரும் 15-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது.. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற அதிகம் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது..

இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதில் மேலும் தாமதம ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தேர்தல் தேதி அறிவிப்பு ஓரிரு நாட்கள் தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்னரே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.. தேர்தல் அறிவிப்பு தாமதமாக இதுவும் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது… மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பின்னர் தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் மக்களவையில் வழங்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து ஏதேனும் சட்ட சிக்கல்கள் எழுமா என்பது குறித்து ஆதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.. எனவே தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு நாளை வெளியாகாது என்றும் ஓரிரு நாட்கள் தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது..

Read More : பொதுமான அளவு கையிருப்பு உள்ளது.. தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை.. அதிகாரப்பூர்வ தகவல்..!

RUPA

Next Post

உங்கள் கண்களில் இந்த மாற்றங்கள் புறக்கணிக்காதீங்க..! அது கல்லீரல் புற்றுநோயாக இருக்கலாம்!

Sat Mar 14 , 2026
நாம் கண்களால் உலகத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல், உடலில் மறைந்திருக்கும் சில உடல்நலப் பிரச்சினைகளையும் கண்டறிய முடியும். கண் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு முக்கியமான உறுப்பு கல்லீரல் ஆகும். கல்லீரல் சரியாகச் செயல்படவில்லை என்றால், உடலில் பல அறிகுறிகள் தென்படும். குறிப்பாக, கண்களில் சில மாற்றங்களைக் கண்டறிய முடியும்; இவை அப்பிரச்சினையை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காண நமக்கு உதவும். அமெரிக்கப் புற்றுநோய் சங்கம் (American Cancer Society) மற்றும் […]
befunky collage 20 1749739681 1

You May Like