ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. தற்போது, ரெப்போ விகிதம் 5.50% ஆக உள்ளது.
இந்த நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர், ஆகஸ்ட் மாத நாணயக் குழுக் கூட்டத்தில் (MPC) புதன்கிழமை, மத்திய வங்கி பாலிசி ரெப்போ விகிதத்தை 5.5 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்கிறது..” என்று கூறினார்..
கடந்த ஜூன் MPC-யில், ரிசர்வ் வங்கி பாலிசி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து 5.5 சதவீதமாக உடனடியாக அமலுக்கு வந்தது..
ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால கடன்களைப் பெறும்போது, ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமாகும். இந்த விகிதம், பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
உதாரணமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும், இதனால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தையும் அதிகரிக்கும். ஆனால் தற்போது ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்பதால், வங்கிகளும் கடன் விகிதத்தை மாற்றாது. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் வட்டி விகிதம் மாறாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..