கல்வித்தகுதி தேவை இல்லை.. சமுதாய வள பயிற்றுநர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்..!! செம வாய்ப்பு..

job

விழுப்புரம் மாவட்டம் 2025-26 ஆம் ஆண்டிற்காக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (CMTC)-இல் சமுதாய வள பயிற்றுநர் (Community Resource Person) பணியிடங்களுக்கு சுயஉதவிக் குழுவில் உள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தது இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறக் இருந்தால் மட்டும் போதுமானது.

தகுதிகள்:

  • சுயஉதவிக் குழுவில் குறைந்தது 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
  • மாவட்டம் / வட்டம் / ஊராட்சி அளவிலான குறைந்தது 5–10 பயிற்சிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
  • கைபேசி செயலிகளை (Mobile Apps) பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
  • குடும்ப ஒத்துழைப்பு அவசியம்.
  • விண்ணப்பிக்கும் சுயஉதவிக் குழுவில் வராக்கடன் நிலை இல்லாமல் இருக்க வேண்டும்.
  • அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிப்பவர்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் முழுநேர/பகுதி நேர வேலை செய்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
  • விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட சுயஉதவிக் குழுவின் பரிந்துரை மற்றும் தீர்மான நகல் இணைக்கப்பட வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பங்கள் www.Villupuram.nic.in என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் 17.09.2025 முதல் 25.09.2025 வரை மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இணைப்பு மாதிரி படிவம் தொடர்புக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண். 04146 2237362. உதவி திட்ட அலுவவர் (CB), தொலைபேசி எண். 9442992115 தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

Read more: இந்த வாரம் சில ராசிக்காரர்களுக்கு பம்பர் ஜாக்பாட்! வாழ்க்கை நல்ல திருப்பம் ஏற்படும்!

English Summary

No educational qualification required.. Community Resource Instructor job.. Great opportunity for women..!

Next Post

Breaking : இதுவே முதன்முறை ஒரே நாளில் ரூ.1680 உயர்வு.. ரூ.85,000ஐ கடந்த தங்கம் விலை.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

Tue Sep 23 , 2025
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]
jewels

You May Like