தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில், சென்னை பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிட விவரங்கள்:
1.பாலின சிறப்பு நிபுணர்
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.21,000
வயது வரம்பு: 35-க்குள்
தகுதி: Social Work இல் இளநிலைப் பட்டம் + குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம்.
2.கணக்கு உதவியாளர்
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 35-க்குள்
தகுதி: Accounts பிரிவில் டிப்ளமோ/இளநிலைப் பட்டம் + 3 ஆண்டுகள் பணி அனுபவம்.
3.தகவல் தொழில்நுட்ப பணியாளர் – மிஷன் சக்தி திட்டம்
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 35-க்குள்
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் + கணினி அறிவு + 3 ஆண்டுகள் அனுபவம்
4.பல்நோக்கு உதவியாளர் (MTS)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.12,000
வயது வரம்பு: 35-க்குள்
தகுதி: குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்கும் முறை: https://chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,செய்தி மக்கள். தொடர்பு அலுவலகம், சென்னை-01 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.