ஹெல்மெட் இல்லையா..? அப்படினா இனி பெட்ரோலும் கிடையாது..!! ஆட்சியர் அதிரடி

ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22 முதல் செப்டம்பர் 2022 வரை 262 இருசக்கர வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 126 பேர் உயிரிழந்தனர். தற்போது தலைக்கவசம் அணியாமல் வந்தால் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதோடு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல், பெட்ரோல் பங்க்-ல் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்காமல் இருப்பது பற்றி நடவடிக்கை எடுக்கலாம் என சாலை பாதுகாப்பு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஹெல்மெட் இல்லையா..? அப்படினா இனி பெட்ரோலும் கிடையாது..!! ஆட்சியர் அதிரடி

இருசக்கர வாகன விபத்தில் பின்னால் அமர்ந்து இருக்கும் பெண்களே அதிகளவில் உயிரிழக்கின்றனர். இதுகுறித்து விவாதிக்கப்பட்டதில் 126 மனித உயிரிழப்புகளில் 99% உயிரிழப்பு ஹெல்மெட் அணியாமல் வந்ததே காரணமாகும். ஆகையால், வாகன ஓட்டி மட்டுமல்லாமல் உடன் அமர்ந்து வருபவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இரண்டு நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது. நகர எல்லைக்குள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மிகாமல் வாகனத்தை இயக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

#திருச்சி :குளிர்சாதன பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி..!

Thu Nov 24 , 2022
திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள நம்பர் 1 டோல் கேட் அருகில் கூத்தூர் கிராமத்தில் செல்வமணி தனது மகன் அய்யப்பன் (22) வசித்து வருகிறார். மகன் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்றைய தினத்தில் வீட்டின் அருகில் வசிக்கும் நாகராஜ் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.  துக்க வீட்டிற்கு சென்ற மகன் இறந்த நபரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு அதற்கு மின் இணைப்பை கொடுக்க முயன்றுள்ளார். இந்த நிலையில் […]
Screenshot 2022 11 24 10 43 58 05 a71c66a550bc09ef2792e9ddf4b16f7a

You May Like