கிராமங்களில் சிறு தொழில் தொடங்க உரிமம் தேவையில்லை..!! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

licence

தமிழகத்தில் கிராமங்களில் தொழில் தொடங்க சிறு வணிகர்களுக்கு உரிமம் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் எல்லைகளுக்கு உட்பட்டு வரும் கடைகளுக்குத் தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக புதிய விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் குடோன்கள், டீக்கடைகள், உணவகங்கள் தங்கும் இடங்கள் திருமண மண்டபங்கள் சிறு அரங்குகள் மற்றும் இறைச்சி கூடங்கள் என வகைப்படுத்தப்பட்டு தனித்தனியாகக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தொழில் உரிமங்கள் வழங்குவது தொடர்பாக புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

அந்த வகையில் சிறு குழு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தொகையின் அடிப்படையில் நகரங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் ரூ.1000 முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலும் உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மற்ற ஊராட்சிகளில் ரூ. 250 முதல் ரூ. 35ஆயிரம் வரை கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. அதேசமயம் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 700 முதல் 10 ஆயிரம் வரையிலும், மற்ற ஊராட்சிகளில் ரூ. 500 முதல் ரூ. 7 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் டீக்கடைகள் மற்றும் உணவகங்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 10 ஆயிரம் வரையிலும், தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற உணவகங்களுக்கு ரூ. 700 முதல் ரூ. 3 ஆயிரத்து 500 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இப்படியான நிலையில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கிராமப்புற பஞ்சாயத்து சிறு குறு கடைகளுக்கு உரிமம் பெற தேவையில்லை என்று சற்றுமுன் அறிவித்துள்ளது.

Read more: Flash: மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு 7 பேருக்கும் விடுதலை..!!

English Summary

No license required to start a business in villages..!! – Tamil Nadu Government Announcement

Next Post

#Breaking : பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம்.. கூட்டணி குறித்து முக்கிய முடிவு.. ஓபிஎஸ் அணி அதிரடி அறிவிப்பு..

Thu Jul 31 , 2025
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை.. இதனால் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 3 மணி […]
newproject 2025 07 25t140135 867 1753432325

You May Like