“என்ன செய்தாலும் வேலைக்கு ஆகல”..!! அரசியலில் இருந்து ஒதுங்கும் ராமதாஸ்..? அதிர்ச்சியில் பாமகவினர்..!!

ramadass 2025

தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, இன்று அதன் வரலாற்றிலேயே காணாத ஒரு மிகப்பெரிய பிளவைச் சந்தித்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களின் சமீபத்திய உத்தரவுகளின்படி, பாமகவின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாடு மற்றும் ‘மாம்பழம்’ சின்னம் ஆகியவை முழுமையாக அன்புமணி ராமதாஸ் வசமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது விசுவாசிகளை ஒன்றிணைத்து ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கி, தனது அரசியல் இருப்பை நிலைநாட்ட போராடி வருகிறார்.


தற்போதைய அரசியல் சூழலில், அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் கைகோர்த்து சுமார் 15 முதல் 20 தொகுதிகள் வரை பெறும் நிலையை எட்டியுள்ளார். ஆனால், ராமதாஸின் புதிய கட்சிக்கு திமுக, அதிமுக அல்லது தமிழக வெற்றி கழகம் என எந்தப் பெரிய சக்திகளும் இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை. அதிமுக பக்கம் போனால் மகனுடனும், திமுக பக்கம் போனால் விசிக-வுடனும் மோதல் ஏற்படும் என்பதால், ராமதாஸ் தரப்பு பெரும் தர்மசங்கடத்தில் உள்ளது.

தன்னைத் தேடி வந்த கட்சிகள் மாறி, தற்போது கூட்டணிக்காகத் தேடிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ராமதாஸ், தனது ஆதரவாளர் அருள் மூலம் திமுக மற்றும் அதிமுக தலைமைகளிடம் தூது விட்டு வருவதாக கூறப்படுகிறது. வன்னியர் வாக்கு வங்கியின் திசை, இந்த தந்தை – மகன் மோதலில் எங்கு சாயும் என்பதே இப்போதைய கேள்வி.

Read More : இல்லத்தரசிகளுக்கு பெரும் நிம்மதி..!! வீட்டு சமையல் சிலிண்டர் விலை அதிரடியாக குறைகிறது..? மத்திய அரசு மாஸ் பிளான்..!!

CHELLA

Next Post

வெறும் 444 நாட்களில் ரூ.5.35 லட்சம் கிடைக்கும்..! SBI-ன் அசத்தல் திட்டம்..!

Fri Feb 20 , 2026
இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பின் தாக்கம் வங்கிகளின் நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களில் தெளிவாக தெரிகிறது. அரசு வங்கிகளில் FD விகிதங்கள் சமீபத்தில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளன. இருப்பினும், வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்க சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அதன் அம்ரித் விருஷ்டி சிறப்பு FD திட்டத்துடன் ஈர்க்கிறது. முன்னதாக […]
SBI money

You May Like