மனித வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கிய நிகழ்வு. சிலர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், பலருக்கு திருமணம் என்பது தாமதமாகவே நடக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் இயல்பாகவே தங்கள் இலக்குகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், திருமணம் தாமதமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே, அந்த 4 ராசிக்காரர்கள் யார் என்பதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி : இவர்கள் மிகவும் பகுத்தறிவு கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். திருமண வாழ்க்கையிலும் இவர்கள் அவசரம் காட்டுவதில்லை. அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து, தங்களுக்கு திருப்தியான முடிவு கிடைத்த பின்னரே திருமணம் செய்து கொள்வார்கள். புதன் கிரகத்தால் ஆளப்படும் இவர்கள், அறிவு மற்றும் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே, சரியான துணையைத் தேடவும், உறவில் இணைவதற்கும் நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றனர்.
தனுசு ராசி : இவர்கள் சாகசங்களையும், பயணங்களையும் விரும்புபவர்கள். வாழ்க்கையை ஒரு பயணமாக பார்ப்பதால், ஒரே இடத்தில் தங்குவது இவர்களுக்கு சவாலானது. குருபகவானால் ஆளப்படும் இவர்கள், உலகை ஆராய்ந்து புதிய அனுபவங்களைப் பெறுவதிலேயே தங்கள் இளமைக் காலத்தைச் செலவிடுகிறார்கள். எனவே, தங்களைப் போலவே சாகசம் மற்றும் வளர்ச்சியில் ஆர்வமுள்ள துணையைத் தேடி, முதிர்ந்த வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
மகர ராசி : இவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள், தங்கள் இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். மேலும், தங்கள் எதிர்காலத்தை உறுதியாக்குவதற்கு மிகவும் கடினமாக உழைப்பார்கள். திருமணம் ஒரு பெரிய பொறுப்பு என்று கருதுவதால், தங்கள் தொழில் மற்றும் நிதி நிலைமை உறுதியான பின்னரே அதைப்பற்றி யோசிப்பார்கள். சனி பகவானால் ஆளப்படும் இவர்கள், பொறுப்புடன் செயல்பட்டு, தொழில் மற்றும் நிதி நிலை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே திருமண பந்தத்தில் இணைவார்கள்.
கும்ப ராசி : கும்ப ராசிக்காரர்கள், சுதந்திரத்தையும் தனித்தன்மையையும் மிகவும் விரும்புபவர்கள். இவர்களுக்கு திருமணம் ஒரு பொறுப்பாக தோன்றுவதால், அதை உடனடியாக ஏற்பதில் தயக்கம் காட்டுவார்கள். தங்கள் தனிப்பட்ட வளர்ச்சி, இலக்குகளை அடைதல் மற்றும் புதிய அனுபவங்களை தேடுவதிலேயே இவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களால் ஆளப்படும் இவர்கள், பொறுப்புகள் மற்றும் தாமதங்களுக்கு காரகர்களாக இருப்பதால், திருமண உறவில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
Read More : தமிழ்நாட்டில் களைகட்டும் நவராத்திரி விழா..!! எந்தெந்த கோயில்களுக்கு செல்வது நல்லது..?