“யாரா இருந்தாலும் கண்ணீர் வரும்..” அன்புமணியின் ஆஸ்கர் விருது விமர்சனத்திற்கு அமைச்சர் உருக்கமான பதில்..

anbil mahesh anbumani

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அன்புமணியின் ஆஸ்கர் அவார்டு விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ உணர்ச்சியற்ற சிலர் இருக்கும் இந்த காலத்தில் நாங்களும் பொது வாழ்க்கையில் இருக்கிறோம்.. மக்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்து வருகிறோம் என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.


கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுக சதி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ அது ரொம்ப கஷ்டமாக இருக்கு. இப்போது ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும்.. நான் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது எனக்கு கரூரில் ஒரு கூட்ட நெரிசல் நடந்ததாக செய்தி வந்தது.. உடனடியாக என்னை கரூர் போக சொல்லி முதல்வர் அறிவுறுத்தினார்.. நான் கரூர் போக 10 மணி ஆகிவிட்டது.. அங்கு சென்ற போது, நமது கண் முன்னால் ஸ்கூல் பசங்க இறந்து கிடக்கும் போது எந்த மனிதனாக இருந்தாலும், அந்த இடத்தில் எந்த தலைவராக இருந்தாலும் சரி கண்ணீர் வரத்தான் செய்யும்.. மன வேதனை இருக்க தான் செய்யும்..

அன்பு கரங்கள் திட்டத்தில் இருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவது வரை அரசு சார்பில் நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.. தயவு செய்து இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. இளைஞர்கள் எங்களுக்கு தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை.. கல்வி சார்ந்து அறிவுப்பூர்வமாக யோசித்து யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கலாம்.. படிக்க வேண்டிய வயதில் நல்லா படிங்க.. பாதுகாப்பா இருங்க.. உங்களுக்கு எந்த தலைவரை பின்பற்ற வேண்டுமோ அவரை பின்பற்றுங்கள்.. உங்களை நம்பி வீட்டில் பெற்றோர்கள் இருக்கின்றனர்.. நாட்டில் அரசாங்கம் இருக்கிறது.. ஆனால் உயிர் ரொம்ப முக்கியம்..” என்று தெரிவித்தார்..

முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருது தரலாம் எனவும், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு வராத கண்ணீர் கரூரில் சிந்தியது ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து..

Read More : மக்கள் மடிந்து கிடக்கும் போது தனது உயிர் தான் முக்கியம் என ஓடும் தலைவரை இதுவரை பார்த்ததில்லை.. கனிமொழி பேட்டி..

RUPA

Next Post

விஜய் வந்தாலே மாநாடு தான்.. 10,000 பேர் தான் வருவார்கள் என எப்படி கணித்தீர்கள்? தவெக தரப்புக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி..

Tue Sep 30 , 2025
மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை என்றும், அதிக கூட்டம் வரும் என்றும் கூட்டம் அதிமானதும் பேச்சை நிறுத்தாதது ஏன்? விஜய்க்கு தெரியுமா என்றும் தவெக தரப்புக்கு கரூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.. கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இதுதொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர […]
karur death2 2

You May Like