அயோத்தி ராமர் கோவிலில் நடந்த கொடி ஏற்ற விழா குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) கடுமையாக கண்டித்துள்ளது. சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கிய நீண்ட வரலாறு கொண்ட பாகிஸ்தானுக்கு, பிறரைப் பற்றி பாடம் புகட்ட எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசிய போது, “பாகிஸ்தான் போலியான மதசார்பற்ற போதனைகளை வழங்குவதற்குப் பதிலாக, தனது மிக மோசமான மனித உரிமை சாதனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
பாகிஸ்தான் வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை நாங்கள் கண்டித்துக் கொள்கிறோம். அந்த கருத்துகளை நாங்கள் நிராகிரிக்கிறோம்… வன்முறை, ஒடுக்குமுறை, மற்றும் தனது சிறுபான்மையினருக்கு தொடர்ச்சியான துன்புறுத்தல் ஆகியவற்றால் கறைபட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நாடான பாகிஸ்தானுக்கு, பிறருக்கு அறிவுரை வழங்க எந்தத் தார்மீக உரிமையும் இல்லை,” என தெரிவித்தார்.. மேலும் “ பாசாங்குத்தனமான மதச்சார்பின்மை அறிவுரைகளை வழங்குவதற்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது சொந்த நிலையை நோக்கி கவனம் திருப்பி, தனது மிக மோசமான மனித உரிமை சாதனைகளில் கவனம் செலுத்துவது நல்லது,” என்றும் அவர் கூறினார்.
அயோத்தியாவில் உள்ள ராமர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற கொடி ஏற்றம் குறித்து பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நடவடிக்கை மதச் சிறுபான்மையினர்மீது அதிகரிக்கும் அழுத்தத்தின் ஒரு பகுதியாகவும், முஸ்லிம் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சியாகவும் உள்ளது என பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இந்த கருத்துகளை தெரிவித்துள்ளது..
Read More : நாடு முழுவதும் 2 கோடி ஆதார் நீக்கம்.. இது தான் காரணம்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…



