இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாகும். இது அரசு வழங்கும் உணவுப் பொருட்கள், நிதி உதவிகள் மற்றும் பல நலத்திட்டங்களை பெற முக்கியமான அடையாளமாக விளங்குகிறது. குறிப்பாக, குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு தமிழக அரசு இலவசமாகவும், மிகக் குறைந்த விலையிலும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகிய பொருள்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் 2.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாக புகார்கள் எழுந்தது.
இதனைக் கருத்தில்கொண்டு, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. எனினும், நீண்டகாலமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் இருந்து வந்த நிலையில் வீடு தேடி ரேஷன் பொருட்கள்’ வழங்கும் திட்டத்தை சோதனை முறையில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது
அதன்படி சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், கடந்த ஜூலை மாதம் 1 முதல் 5 ஆம் தேதி வரை இந்த திட்டம் சோதனை முறையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. சோதனை முயற்சி வெற்றி அடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். எனவே விரைவில் உங்கள் வீடு தேடி ரேஷன் பொருள் வந்து சேரும்.
Read more: மலை உச்சியில் அழகான கிராமம்.. இதுவரை மழையே பெய்யாத அதிசயம்..!! என்ன காரணம் தெரியுமா..?