இனி அக்குள் வியர்வை, துர்நாற்றம் பற்றி கவலை வேண்டாம்!. கட்டுப்படுத்த ஈஸி டிப்ஸ்கள் இதோ!

underarm sweat

வியர்வை பொதுவானது. கோடைக்காலங்களில் உடலில் வரும் வியர்வை உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக்க செய்கிறது என்பதை அறிவோம். ஆனால் அதீத வியர்வை என்பது ஹைப்பர் அஹிட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது அக்குள் மட்டும் அல்லாமல் உடல் முழுவதும் வியர்வையை உண்டு செய்யும். அக்குள் வியர்வை என்பது அதிக அசெளகரியத்தை உண்டு செய்யலாம். அது தவிர்க்க வேண்டியதில்லை என்றாலும் அதனுடன் வெளிவரும் துர்நாற்றம் மோசமானதாக இருக்கும் நிலையில் அக்குள் வியர்வை தவிர்ப்பதே நல்லது. இந்த அக்குளில் வெளிப்படும் வியர்வை மற்றும் துர்நாற்றம் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.


ஆண்கள் பெண்கள் இருவருமே அக்குள் பகுதி வியர்வையை அனுபவித்தால் முடியை ட்ரிம் செய்யாமல் ஷேவிங் செய்வது நல்லது. குறிப்பாக கோடைகாலங்களில் ஷேவிங் செய்வது வியர்வையை குறைக்கவில்லை என்றாலும் துர்நாற்றம் வராமல் தடுக்கும். வியர்வையின் போது அவை முடியில் தங்கி துர்நாற்றம் உண்டு செய்யும். அதனால் ஷேவ் செய்து முடியை அகற்றுவது ஈரப்பதத்தின் அளவை குறைக்கும். வியர்வை துர்நாற்றம் குறையும்.

அக்குள் பகுதி வியர்வையும் துர்நாற்றமும் இருந்தால் முதலில் ஆடைகள் இறுக்கத்தை தளர்த்த வேண்டும். தளர்வான ஆடைகளை அணிவது குறிப்பாக கைகளுக்கு அடியில் இறுக்க்கமாக இருக்கும் போது வியர்வை படிந்து சட்டையில் தங்கும். ஆடையில் ஈரமாக இருக்கும். இந்த வியர்வை துர்நாற்றத்தையும் சேர்த்து வெளிப்படுத்தும். அதற்கு பதிலாக இயற்கையான சுவாசிக்க கூடிய துணி வகைகள் பயன்படுத்த வேண்டும். இது அக்குள் சரியாக குளிர்விக்க உதவும். வியர்வை கறைகள் ஆடைகளில் படிவதை தடுக்க உதவும். அதிகப்படியான வியர்வை ஆடையில் படிந்து அந்த இடம் தனித்து தெரிந்தால் அக்குள் லைனர்கள் அல்லது பேட் பயன்படுத்தலாம். இது துர்நாற்றம் உண்டு செய்யாது.

குளித்த பிறகு ஆடை அணியும் போது சருமம் உலரும் வரை காத்திருங்கள். குளித்த உடன் ஆடை அணிய வேண்டாம். சூடான குளியல் எடுத்தாலும் ஈர்ப்பதமான வெப்பமான காலநிலை என்று இருந்தாலும் சருமம் ஈரத்துடன் இருக்கும் போது ஆடைகள் அணிய கூடாது. உடல் ஈரப்பதமில்லாமல் ஆடை அணிவது அக்குள் வியர்வையை தடுக்க உதவும்.

அக்குள் வியர்வையால் ஆடையிலும் கறைகள் ஏற்படும் போது அதை கட்டுப்படுத்த ஆன் டி டிஸ்பெர்ஸண்ட் பயன்படுத்தலாம். இது கைகளுக்கு கீழ் இருக்கும் துர்நாற்றத்தை நிறுத்தும். இது வியர்வை தடுக்காது என்றாலும் நாற்றம் வராமல் தடுக்கும். இது துர்நாற்றம் உண்டு செய்யும் பாக்டீரியாக்களை கொன்று வியர்வை சுரப்பிகள் அக்குள் கீழ் வியர்வை உற்பத்தி செய்வதை தீவிரமாக தடுப்பதால் அசெளகரியம் குறையும். சிலருக்கு இவை போதுமான பலன் அளிக்கவில்லை என்றால் வலுவான ஒன்றை நிபுணரின் ஆலோசனையுடன் தேர்வு செய்யலாம்.

காஃபைன் பானங்கள் நரம்பு மண்டலத்தை தூண்டி வியர்வையை அதிகரிக்கும். இது இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிப்பதால் வியர்வை சுரப்பிகள் வேகமாக இயங்குகிறது. மேலும் சிலருக்கு அதீத வியர்வை பிரச்சனையான ஹைப்பர்ஹைட்ரோசிஸ் இருந்தால் காஃபின் அல்லது தியோப்ரோமைன் உணவு பானங்கள் வியர்வையை அதிகரிக்கலாம். அதனால் காஃபின் கொண்ட காஃபி தேநீர், காஃபின் கலந்த பானங்கள், குளிர்பானங்கள், சாக்லேட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

உடல் நீரிழப்பு ஏற்படாமல் வைத்திருக்க அதிக நீர்ச்சத்து மிக்க் பானங்க்ள் சேர்க்க வேண்டும். இது உடலை குளிர்ச்சியாக வைத்து அக்குள் பகுதியில் அதிகவியர்வை ஏற்படுவதை தடுக்க செய்கிறது. தண்ணீர், இளநீர், மோர், முலாம்பழம், தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, புடலங்காய், சுரக்காய், பூசணிக்காய், முள்ளங்கி என நீர்ச்சத்து மிக்க உணவுகளை எடுப்பது வியர்வையை கட்டுப்படுத்தும். இதனால் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

Readmore: 21 நாட்களுக்கு தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

KOKILA

Next Post

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள், கப்பல் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன!.

Wed Jun 4 , 2025
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 9 தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தன. இதையடுத்து பதற்றம் அதிகரித்ததால் இருநாடுகளிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் […]
india fighter jets

You May Like