தமிழக வருவாய்த் துறை பட்டா மாறுதல் உட்பட இன்னும் பல சேவைகளை மிகவும் சுலபமாக்கி பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது அரசு. ஆன்லைனில் நீங்க பட்டா மாற்ற வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே படித்து பார்த்து அறிந்துகொள்ளலாம்.
முன்னர், பட்டா மாற்றம் செய்ய வேண்டுமென்றால் பொதுசேவை மையம் அல்லது சார்பதிவாளர் அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது, பொதுமக்கள் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தின் வாயிலாக எங்கிருந்தும் எந்நேரத்திலும் விண்ணப்பிக்கலாம். மேலும், நில உட்பிரிவுக்கான கட்டணமும், செயலாக்கக் கட்டணமும் ஆன்லைனில் செலுத்தும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டா உத்தரவு, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை இனி நீங்கள் உங்கள் மொபைல் அல்லது கணினி மூலம் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். இது, வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று இடைத்தரகர்களிடம் சிக்குவதை முற்றிலுமாக தவிர்க்க உதவுகிறது.
அத்துடன், நகர்ப்புற நிலவரைபடங்களை https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த வரைபடங்கள் மனை அங்கீகாரம், வங்கிக் கடன் பெறுதல் போன்ற சேவைகளுக்கு மிகவும் பயன்படும். இதனால், நகரப்பகுதி மக்கள் தங்களது நில வரைவுகளை வீடிலிருந்தபடியே பெற முடியும்.
பாகப்பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், கிரையப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், அக்குவிடுதலைப் பத்திரம், பரிவர்தனை பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். பத்திரப்பதிவு செய்ய உட்பிரிவுக்கு ரூ. 600 கட்டணம் செலுத்த வேண்டும். உட்பிரிவு இல்லையென்றால் ரூ. 60 கட்டணம். ஆன்லைனில் விண்ணப்பித்த பின பட்டா பெயர் மாற்றம் செய்ததற்கான சான்று கொடுக்கப்படும்.
இசேவை மையத்திலும் அப்ளே செய்து பட்டா பெயர் மாற்றம் செய்யலாம். இதற்கு தேவையான சான்றுகள் மற்றும் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட நகல்களுடன் விஏஓ அலுவலகத்தை அணுக வேண்டும். இதனையடுத்து ஒரு வாரத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும். இதனை ஆன்லைனில் டவுன்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
வருவாய்த் துறையின் இந்த மாற்றம், தமிழக நிர்வாகத்தின் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது. இதன் மூலம், மக்கள் நேரமும் பணமும் மிச்சப்படும், ஊழலுக்கும் கட்டுப்பாடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: மீண்டும் பரபரப்பு.. டெல்லி வந்த ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிடவிட்டது.. என்ன காரனம்?