கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஒரு காதல் ஜோடி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கொலை மற்றும் தற்கொலையில் முடிந்துள்ளது. சிவலோஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே இருவரும் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர். இதற்கிடையே, சிவலோஷின் குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருந்ததால், வீட்டில் தனிமையாக இருந்துள்ளார். அப்போது, காதலர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து, காதலியும் சிவலோஷின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த காதலன், காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவத்தின்போது சிவலோஷின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், காதலி மீனாட்சி அறையில் உயிரிழந்த நிலையிலும் கிடந்தார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.