யாரும் வெளியே வர வேண்டாம்.. மெக்சிகோவில் வெடித்த கலவரம்.. இந்திய தூதரகம் எச்சரிக்கை..!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் மென்சோ சுட்டுக் கொல்லப்பட்டதால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.. எல் மென்சோ கொல்லப்பட்டதால் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியும், வாகனங்களை தீயிட்டு கொளுத்தியும் ஆதரவாளர்கள் அட்டகாசம் செய்தனர்.. மேலும் மெக்சிகோவில் கண்ணில் தென்படும் வாகனங்கள், வணிக வாகனங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தீ வைத்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது..


இந்த நிலையில் மெக்சிகோவில் பல பகுதிகளில் கடுமையான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதால், அங்கு வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

மெக்சிகோ நகரில் உள்ள இந்திய தூதரகம், வெளியிட்ட அறிக்கையில், இந்தியர்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஜாலிஸ்கோ மாநிலம் – புவேர்டோ வல்லார்டா, சபாலா, குவாடலஹாரா

டாமௌலிபாஸ் மாநிலம் – ரெய்னோசா மற்றும் சுற்றுப்புற பகுதிகள்

மிச்சோக்கான், குவேரேரோ, நுவோ லியோன் மாநிலங்களின் சில பகுதிகள் இந்த பகுதிகள் அதிக ஆபத்து உள்ள பகுதிகள் என்றும் இந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள், சாலை அடைப்புகள் மற்றும் குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன என்று இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது..

இந்தியர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:

காவல் துறை அல்லது ராணுவ நடவடிக்கை நடக்கும் இடங்களை தவிர்க்கவும்

சுற்றுப்புற சூழலை எப்போதும் கவனத்தில் கொள்ளவும்

அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்

உள்ளூர் செய்திகளை தொடர்ந்து கவனிக்கவும்

உள்ளூர் அதிகாரிகள் கூறும் வழிமுறைகளை பின்பற்றவும்

அவசரநிலையில் 911-க்கு அழைக்கவும்

பெரிய கூட்டங்களை தவிர்க்கவும்

உங்கள் இருப்பிடத்தை குடும்பத்தினர், நண்பர்களுக்கு தெரிவித்து வைத்திருங்கள்

உதவி எண்: மெக்சிகோவில் உள்ள இந்திய தூதரகத்தை +52 55 4847 7539 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வன்முறைக்கு காரணம் என்ன?

மெக்சிகோ ராணுவம் நடத்திய ஒரு பெரிய நடவடிக்கைக்குப் பிறகு இந்த வன்முறை சம்பவங்கள் தொடங்கின.. அந்த நடவடிக்கையில், அதாவது “எல் மேன்சோ” என்ற போதைப் பொருள் கடத்தல் மன்னன் படுகாயாடைந்தார்.. ஜாலிஸ்கோ மாநிலத்தில் நடந்த அந்த சண்டைக்குப் பிறகு, அவரை விமானம் மூலம் மெக்சிகோ நகருக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார் என்று மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல் மென்சோவின் CJNG என்பது மெக்சிகோவில் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கும்பல்களில் ஒன்று. இந்த கும்பல் ராணுவத்தையும் நேரடியாக தாக்கும் அளவுக்கு மிகவும் வன்முறையான கும்பல் ஆகும்.. அமெரிக்காவின் போதைப் பொருள் தடுப்பு அமலாக்கத்துறையின் படி, இந்த புகழ்பெற்ற Sinaloa Cartel கும்பலுக்கு சமமான சக்தி கொண்டது. இதன் செயல்பாடுகள் அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் பரவி உள்ளன. இந்த சூழ்நிலையை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு இதே போன்ற எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : 18 பேர் பலி.. ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. நேபாளத்தில் பெரும் சோகம்..!

RUPA

Next Post

நீங்கள் வாட்டர் ஹீட்டரை அதிகமாக பயன்படுத்துகிறீங்ககளா? இந்த பிரச்சனைகள் வருவது உறுதி..!

Mon Feb 23 , 2026
சிலர் வீட்டில் வழக்கமான வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இருப்பினும், அதிக வெப்பமான நீர் அல்லது உபகரணங்களை முறையற்ற முறையில் பயன்படுத்துவது உடல்நலம் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தண்ணீர் மிக அதிக வெப்பநிலையை அடைந்தால், சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பத அடுக்கு சேதமடையக்கூடும். இது சருமத்தின் வறட்சி, அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் […]
water heater 1

You May Like