உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் கௌரி திரிபன்பூர் கிராமத்தில் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு, கணவரே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தகவல்களின்படி, ஒரு கணவர், தனது மனைவிக்கு குடும்ப உறவினர் ஒருவருடன் கள்ள உறவு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் ஆழமடைந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், கோபத்தின் உச்சியில் இருந்த கணவர், ஒரு மண்வெட்டியால், தனது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைக்கு பிறகு, தான் செய்த குற்றத்தை மறைக்க முயன்ற அந்த கணவர், மனைவியின் சடலத்தை அருகில் உள்ள ஒரு வயலில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், அச்சல்கஞ்ச் காவல் நிலைய போலீசார் உடனடியாக கௌரி திரிபன்பூர் கிராமத்திற்கு விரைந்தனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார், அங்கிருந்த சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகமே இந்த கொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. குற்றத்தை செய்ததாக கூறப்படும் கணவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். கொலைக்கான துல்லியமான காரணங்கள் மற்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : பைக்கின் பின் இருக்கை மட்டும் ஏன் உயரமாக இருக்கிறது தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்..!!



